Skip to main content

ரஜினியுடன் இணையும் பிரபல கன்னட நடிகர் ; வெளியான புதிய தகவல்

Published on 04/05/2022 | Edited on 04/05/2022

 

Famous Kannada actor who joins Rajini's 'Thalaivar 169' movie

 

தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நடிகராக இருக்கும் ரஜினிகாந்த் கடைசியாக 'அண்ணாத்த' படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அடுத்ததாக மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். நெல்சன் இயக்கவுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தலைவர் 169' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. படக்குழு நடிகர், நடிகைகள் தேர்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்தது. 

 

இந்நிலையில் 'தலைவர் 169' படத்தில் புகழ் பெற்ற கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நூறு படங்களுக்கு மேல் நடித்துள்ளார் சிவ ராஜ்குமார். கன்னடத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் இவர் சமீபத்தில் மறைந்த புனித் ராஜ்குமார் அவர்களின் அண்ணன் ஆவார். இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் தமிழ் மற்றும் கன்னடம் மொழிகளில் புகழ் பெற்ற இரண்டு மெகா ஸ்டார்கள் இணைந்து நடிக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் தமிழ்நாடு மற்றும் கன்னடத்தில் பெரும் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரஜினியுடன் இணைந்து நடிக்கும் பாலகிருஷ்ணா

Published on 05/06/2024 | Edited on 05/06/2024
balakrishna to act in jailer 2

ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அவருக்கான போர்ஷன் படமாக்கப்பட்டு முடிந்து மற்ற நடிகர்களின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. 

இப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜு இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பறிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் டைட்டில் ஏற்கெனவே வெளியாகி பலரது கவனத்தைப் பெற்றது. ஜூன் 10ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. 

கூலி படத்தை தொடர்ந்து, மீண்டும் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. இதில் கதாநாயாகியாக நயன் தாரா நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இப்படத்தில் தெலுங்கு மூத்த நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இவர் முதல் பாகத்தின் போதே நடிக்க பேச்சு வார்த்தை நடந்ததாகத் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. முதல் பாகத்தில் மலையாள முன்னணி நடிகர் மோகன்லால், கன்னட முன்னணி நடிகர் சிவராஜ்குமார் ஆகியோர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

இந்தியன் 2 - அனைத்து பாடல்களும் வெளியீடு 

Published on 01/06/2024 | Edited on 01/06/2024
indian 2 audio songs released

கமல் - ஷங்கர் கூட்டணியில் நீண்ட காலமாக உருவாகி வரும் படம் இந்தியன் 2. இப்படம் இந்தியன் 3 ஆகவும் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. முன்னதாக படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து, கரோனா பரவல், இயக்குநர் ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையேயான கருத்து வேறுபாடு ஆகிய பிரச்சனைகளால் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டுப் போனது. பின்னர் மீண்டும் படப்பிடிப்பு நடந்து வந்தது. 

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் விவேக், மனோ பாலா, நெடுமுடி வேணு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இவர்கள் மூவரும் இப்போது மறைந்து விட்டனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இப்போது இந்தியன் 2 படத்திற்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகப் பேசப்படுகிறது. இப்படத்தின் முன்னோட்ட வீடியோ ஒன்று கடந்த ஆண்டு நவம்பரில் வெளியானது. 

மேலும் இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஜூன் மாதம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டு பின்பு ஜூலை 12ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதனால் படத்தின் ப்ரொமோஷன் பணிகளில் ஷங்கரும் கமல்ஹாசனும் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து இப்படத்தின் முதல் பாடல் ‘பாரா’, இரண்டாம் பாடலாக ‘நீலோற்பம்’ உள்ளிட்ட பாடல்கள், லிரிக் வீடியோவுடன் சமீபத்தில் வெளியனது. 

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (01.06.2024) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. இதில் ரஜினி, ராம் சரண், சிரஞ்சீவி கலந்து கொள்வதாக கூறப்படுகிறது. இப்படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் இருக்கும் நிலையில் தற்போது நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே மொத்த பாடல்களையும் யூட்யூபிக் வெளியிட்டுள்ளது படக்குழு. மேலும் ஸ்பாட்டிஃபை, கானா, உள்ளிட்ட ஆறு தளங்களில் ஆறு பாடல்களும் அடங்கிய ஆல்பம் வெளியாகியுள்ளது.