Skip to main content

சிம்புவுடன் இணைந்த 'தி ஃபேமிலி மேன்' வெப் சீரிஸ் பிரபலம்!

 

Family Man fame Neeraj Madhav joins vendhu Vendhu Thanindhathu Kaadu film

 

இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில், நடிகர் சிம்பு 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி இருவரும் நடிக்கின்றனர். வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மும்பையில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

 

இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 'வெந்து தணிந்தது காடு' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ‘தி ஃபேமிலி மேன் வெப் தொடரில் நடித்து பிரபலமான நீரஜ் மாதவ் ஸ்ரீதரன் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. அத்துடன் படக்குழு புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.