Skip to main content

‘தடை சிதறிட உடைபட ஏறடா...’ - விடாமுயற்சி நாயகர்களின் க்ளிக்

 

 everest rajasekar meets ajithkumar

 

சென்னையை அடுத்த கோவளத்தைச் சேர்ந்த இளைஞர் ராஜசேகர் பச்சை என்பவர், மலையேற்றத்தின் மீது ஆர்வம் கொண்ட நபராக இருந்து வந்துள்ளார். அந்த வகையில் எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைக்க வேண்டும் என்ற கனவோடு கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி எவரெஸ்ட் அடிவாரத்தில் பயணத்தைத் தொடங்கி 8,850 மீட்டர் உயரத்தை கடந்த மே 19 தேதி சென்றடைந்துள்ளார். 

 

பல தடைகளைத் தாண்டி விடாமுயற்சியுடன் எவரெஸ்ட் சிகரத்தை ஏறி, பாதுகாப்பாக கீழே திரும்பியுள்ளார். இவரது சாதனைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். மேலும் பல்வேறு தரப்புகளிடமிருந்தும் பாராட்டு குவிந்தது. 

 

இந்நிலையில் விடாமுயற்சியுடன் சாதித்த ராஜசேகர் பச்சை விடாமுயற்சி படத்தின் நாயகன் அஜித்குமாரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.