/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/KAMAL434.jpg)
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'DSP' திரைப்படத்தின் பாடல் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (25/11/2022) நடைபெற்றது. விழாவில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் மிஷ்கின், நடிகர் வைபவ் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் கமல்ஹாசன், "சகோதரர் விஜய் சேதுபதியின் 'DSP'-க்காக இங்கு வந்திருக்கேன். படம் வெற்றி பெற எனது வாழ்த்துகள். ட்ரைலர் பார்த்தேன்.ரொம்ப நல்லாருந்துச்சி. விழாவின் போது சொன்னேன், முன்பெல்லாம்பெரிய விபத்து நேரும் போது கூட, அடுத்து எப்ப ஷூட்டிங் வரீங்கனு கேட்பாங்க. அடுத்தப் படம் எப்ப ரிலீஸ்னு கேட்பாங்க.
இப்ப சின்ன இருமல்னா கூட, எனக்கு பெரிய செய்திகள் எல்லாம் வந்துட்டு இருக்கு. அதற்குக் காரணம் ஒன்று ஊடகம், மற்றொன்றுபெருகியிருக்கும் அன்பு என்று நான் நம்புகிறேன். நன்றாக இருக்கிறேன். ‘இந்தியன் 2’ படத்துக்கான அடுத்தகட்டபடப்பிடிப்பு ஆரம்பித்துள்ளது" எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)