/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Navarasa_Roudhram_Netflix_2580_0.jpg)
'அரிமா நம்பி' படத்தின் மூலம், தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குநர் ஆனந்த் சங்கர். இவர், தற்போது நடிகர் விஷாலை வைத்து 'எனிமி' என்ற திரைப்படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிர்னாலினி ரவி நடிக்கிறார். நடிகர் ஆர்யா வில்லனாக நடித்துவரும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ஐதராபாத்தில் நடந்த இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.
இதையடுத்து இதன் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு துபாயில் 30 நாட்கள் நடைபெற்றது. அங்கு, அதிரடி சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன. ஒருமாதமாக துபாயில் நடைபெற்றுவந்த இரண்டாம்கட்ட படப்பிடிப்புசமீபத்தில் முடிவடைந்தது. இதையடுத்து இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், இப்படத்தின் டீசர் வெளியீடு குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. அதன்படி ‘எனிமி’ படத்தின் டீசர் இன்று ஜூலை 24ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 'எனிமி' படத்தின் டீசர் தற்போது அதிகாரபூர்வமாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)