/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/30_60.jpg)
இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜூலை 21 ஆம் தேதி வெளியான படம் 'அநீதி'. இப்படத்தை தயாரித்து தயாரிப்பாளராகவும் அறிமுகமாகி இருந்தார் வசந்த பாலன். ஜி.வி. பிரகாஷ் இசையில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
இதையடுத்து கடந்த 15 ஆம் தேதி ஓடிடியில் இப்படம் வெளியானது. இந்த நிலையில் நடிகை துஷாரா விஜயன், இந்த படத்திற்காக கிடைத்த வரவேற்பிற்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எனக்கு சவால் நிறைந்த மற்றும் ஒரு கலைஞனாக எனது வளர்ச்சிக்கு உதவும் கதாபாத்திரங்கள் மற்றும் வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் திரையுலகில் எனது பயணத்தைத் தொடங்கினேன். நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, புதிய களங்களை ஆராயவும், புதிய கதாபாத்திரங்களில் வாழவும், அவர்களின் கதைகளுக்கு உயிர் கொடுக்கவும் எனக்கு சில அற்புதமான வாய்ப்புகள் கிடைத்தது.
அந்த வகையில் இன்னொரு நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் அநீதி படத்தில் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி. அதனை மக்கள் பாராட்டுவதை பார்க்கும் போது அழகாக இருக்கிறது" எனக் குறிப்பிட்டு படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் "அனைவரின் ஆதரவும் ஊக்கமும் என்னை மேலும் கடினமாக உழைக்கவும் எதிர்காலத்தில் இன்னும் சிறந்த நடிப்பை கொடுக்கவும் தூண்டுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)