Skip to main content

மோகன்லால், மம்மூட்டியை தொடர்ந்து பிரபல நடிகரை கௌரவித்த அமீரகம்

Published on 23/04/2022 | Edited on 23/04/2022

 

dubai honors famous actor following Mohanlal Mammootty

 

ஐக்கிய அரபு அமீரகத்தில் முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர், ஆராய்ச்சி மற்றும் அறிவியலில் சிறந்து விளங்கும் மாணவர்கள், விளையாட்டு துறையில் சாதித்தவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் 10 ஆண்டுகள் செல்லுபடியாகக் கூடிய  கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. அதன்படி இந்தியாவில், ஷாருக்கான், அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, திரிஷா, நாசர் உள்ளிட்ட பலருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் நடிகர் ரஹ்மானுக்கு தற்போது அமீரக அரசு கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. மலையாளத்தில் மோகன் லால், மம்மூட்டி, துல்கர் சல்மான் இவர்களை தொடர்ந்து தற்போது ரஹ்மானுக்கு கோல்டன் விசா கிடைத்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“உங்களுடைய தீவிர ரசிகன் சார்” - செல்வ ராகவன் பிரமிப்பு

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
selvaraghavan about mammootty

ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் உருவாகியுள்ள படம் பிரமயுகம். நைட் ஷிப்ட் ஸ்டூடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன், அமல்டா லிஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

இந்த நிலையில், இன்று (15.02.2024) தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்று வருகிறது. இந்த சூழலில் மம்மூட்டி, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தில் இருக்கும் அவரது புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

அந்த பதிவின் கீழ் ரசிகர்கள் மட்டுமல்லாது திரைப் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். அந்த வகையில் இயக்குநர் மற்றும் நடிகரான செல்வராகவன், “உங்களுடைய தீவிர ரசிகன் சார். பிரமிப்பாக உள்ளது” என கமெண்ட் செய்துள்ளார்.

Next Story

முதலமைச்சராக கவனம் ஈர்த்த ஜீவா

Published on 05/01/2024 | Edited on 06/01/2024
jiiva as cm jegan mogan reddy in yatra 2

தெலுங்கில் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. இதனை இயக்குநர் மஹி வி ராகவ் இயக்கவுள்ளார். இவர் இதற்கு முன்னதாக ஜெகன் மோகன் ரெட்டியின் அப்பாவான மறைந்த ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தவர். 'யாத்ரா' என்ற தலைப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் ராஜசேகர ரெட்டி கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் நிலையில், ஜெகன் மோகன் கதாபாத்திரத்தில் ஜீவா நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் அடுத்த மாதம் பிப்ரவரி 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர் வெளியானது.  

இந்த நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் ஒரு கண் தெரியாத நபர், ஜெகன் மோகன் ரெட்டி படம் பொருந்திய பதாகை வைத்துக் கொண்டு இரவு நேரத்தில் உட்காந்திருக்கிறார். அவரிடம் ஜெகன் மோகன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜீவா பேசும் காட்சி வருகிறது. பின்பு அவருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இருந்த முரண்பாடுகள் குறித்த காட்சிகள் இடம்பெறுகிறது. தொடர்ந்து அவர் நடத்திய யாத்ரா, சட்டமன்றத்தில் நடக்கும் விஷயங்கள் என நீள்கிறது. இந்த டீசர் தற்போது ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது.