பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ள அஜித் நடித்த துணிவு திரைப்படத்தைப் பற்றியும் அஜித் பற்றியும் அதன் இயக்குநர் ஹெச்.வினோத் சில சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அவை பின்வருமாறு..
துணிவு சீரியசான படமல்ல. எல்லா விசயங்களையுமே சுவாரசியமா ஜாலியா சொல்ல முயற்சித்திருக்கிற படம், அவ்வளவு தான். அதில் பணம் கையாள்வது பற்றி ஒரு பகுதியாக வருகிறது. தொடர்ச்சியாக மூன்று படம் ஒரே நாயகனோட பயணிப்பது ஆரோக்கியமா, இல்லையான்னு யோசிக்க வேண்டிய அவசியம் எனக்கு ஏற்படவில்லை. படம் அந்த குழுவிற்கு வேலை செய்ய வசதியாக இருக்கா என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். நல்ல விசயங்களை சொல்ல ஒரு படம் முனைகிறதா மற்றும் சமூக ரீதியிலான மாற்றங்களை உள்ளடக்கியதா என்பதையும் முக்கியமாகக் கருத வேண்டும். அந்த வகையில் அஜித் உடன் இணைந்து பணியாற்றிய நேர்கொண்ட பார்வையும், வலிமையும் சமூகத்திற்கு தேவையான விசயத்தை பேசியதாக உணர்கிறோம். அந்த வகையில் இந்த இரண்டு படங்களிலிருந்து கற்றுக்கொண்டதை வைத்து துணிவு எடுத்திருக்கிறோம்.
அஜித் எப்பவும் ஒரு பெரிய நடிகர் என்று நடந்து கொள்ளமாட்டார். வெகுஜன மக்கள் போல ரொம்ப சாதாரணமாக இருப்பார். என்னோட வார்த்தைகளுக்கு பின்னே ஆழமான அர்த்தம் இருப்பதாக உணர்வார். தனிப்பட்ட தாக்குதல்கள் இல்லாத படங்களை எடுக்க வேண்டும் என்றே விரும்புவோம். பிரபலமான நபர்கள் இருந்தால் வேலை வாங்குறதும் ஈசி என்பதால் நிறைய யூடியூப் செலிபிரிட்டிகளை படத்தில் பயன்படுத்தியிருக்கிறோம்.