![Director suseenthiran plays the villain in Bharathiraja movie](http://image.nakkheeran.in/cdn/farfuture/-QYDi2UW9WLHpy6sFus8SaA_XrvfT92FDcoFAc-olyA/1686027654/sites/default/files/inline-images/Susi.jpg)
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா ஹீரோவாகவும், முக்கிய கதாபாத்திரங்களிலும் பல படங்களில் நடித்துள்ள நிலையில் இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கும் படம் 'மார்கழி திங்கள்'. இப்படத்தை இயக்குநர் சுசீந்திரன் தயாரிக்க பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் இசைப் பணிகளை ஜி.வி. பிரகாஷ் மேற்கொள்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பழனி அருகே கணக்கப்பட்டி பகுதியில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. படப்பிடிப்பு தளத்தில் மழையினால் இடி விழுந்த நிலையில் ஏற்பட்ட விபத்தில் நல்வாய்ப்பாக 5 லைட் மேன்கள் உயிர் தப்பியதாக இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் சுசீந்திரன் ‘மார்கழி திங்கள்’ படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இயக்குநர் சுசீந்திரன் ஏற்கனவே ‘சுட்டு பிடிக்க உத்தரவு’ என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.