/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/15_47.jpg)
பா.ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெய்ராம், துஷாரா விஜயன், கலையரசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியான படம் 'நட்சத்திரம் நகர்கிறது'. சமூகத்தில் காதலின் பரிணாமங்களை பற்றி பேசும் இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இருப்பினும் இப்படத்தில் இடம்பெற்ற வசனம் பேசும்பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக ஒரு காட்சியில் கலையரசன் கதாபாத்திரம் துஷாரா கதாபாத்திரத்திடம் நீங்க கம்யூனிஸ்ட்டா? என்று கேட்க அம்பேத்கரிஸ்ட் என பதிலளிப்பார் துஷாரா. இந்த வசனம் தொடர்பாக பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் 'மேற்கு தொடர்ச்சி மலை' படத்தின் இயக்குநர் லெனின் பாரதி தனது கருத்தை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக லெனின் பாரதி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நீங்க கம்யூனிஸ்டா? என்று கேட்டதற்கு, தான் ஒரு அம்பேத்கரிஸ்ட் என்று கூறுவதை… கம்யூனிசம் சிறந்ததா? அம்பேத்கரியம் சிறந்ததா? என்கிற தொனியில் திரித்து தோழர் பா.ரஞ்சித் மீது தனிநபர் தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பவர்கள் தங்களது அரசியல் பார்வையை சுய விமர்சனத்திற்கு உட்படுத்துவது நலம்" என குறிப்பிட்டுள்ளார். லெனின் பாரதியின் இப்பதிவை பா.ரஞ்சித் லைக் செய்துள்ளார்.
நீங்க கம்யூனிஸ்டா? என்று கேட்டதற்கு, தான் ஒரு அம்பேத்கரிஸ்ட் என்று கூறுவதை… கம்யூனிசம் சிறந்ததா? அம்பேத்கரியம் சிறந்ததா? என்கிற தொணியில் திரித்து, தோழர் @beemji மீது தனிநபர் தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பவர்கள் தங்களது அரசியல் பார்வையை சுய விமர்சனத்திற்கு உட்படுத்துவது நலம்..
— leninbharathi (@leninbharathi1) September 8, 2022
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)