Skip to main content

சிம்புவுக்கு நன்றி தெரிவித்த பிரபல இயக்குநர் 

Published on 11/04/2022 | Edited on 11/04/2022

 

director chachhi thanks silambarsan

 

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்த சதிஷ் நாய் சேகர் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தாக சட்டம் என்கையில் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சிக்ஸர் படத்தை இயக்கி பலரின் கவனத்தை பெற்ற சாச்சி இயக்கவுள்ளார். பாவெல் நவகீதன், அஜய் ராஜ் ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். க்ரிஷ் இன்டர்நேஷனல் பிலிம் கிரியேசன், சீட்ஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் சண்முகம் கிரியேசன் இணைந்து தயாரிக்க, ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் சட்டம் என் கையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிம்பு சமீபத்தில் வெளியிட்டிருந்தார். அந்த போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. 

 

இப்படம் குறித்து இயக்குநர் சாச்சி கூறுகையில், "பிரபல காமெடி நடிகர் சதீஷை மாறுபட்ட தோற்றத்தில் காட்ட வேண்டும் என்று நினைத்தேன். நடிகர் சதீஷ் காமெடி மட்டுமே செய்யக் கூடியவர் அல்ல, அவரின் திறமையை, அவரது வேறொரு பரிமாணத்தை “சட்டம் என் கையில்” படத்தில் பார்க்கலாம். அவரது தனித்துவமான நடிப்பு நிச்சயம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். என் முதல் படம் முழுக்க காமெடியை சுற்றியதாக இருக்கும், ஆனால் இந்த படம் அதிலிருந்து மாறுபட்டு பரபர திரில்லர் படமாக உருவாகியுள்ளது. ஒரு இரவில் நடக்கும் கதை, நாயகன் டிரங்க் & டிரைவ் கேஸில் போலீசிடம் மாட்டுகிறார், அந்த இரவில் அவருக்கு நடக்கும் சம்பவங்கள் தான் இந்தப் படம். மென்மையாக ஆரம்பிக்கும் படம், ரசிகர்களை இருக்கை நுனியில் அமர்த்தி வைக்கும் பரபர திரில்லர் அனுபவமாக மாறிவிடும்.அனைத்து மக்களையும் எளிதில் கவரும் படியாக, கமர்ஷியல் திரில்லராக இப்படம் இருக்கும். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ஒரு பிரபலம் வெளியிட்டால் நன்றாக இருக்குமென நடிகர் சிலம்பரசனை அணுகினோம். உடனே ஒப்புக் கொண்டு, படத்தை பாராட்டி ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். அவருக்கு இந்த நேரத்தில் எங்களது படக்குழுவினர் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்