Skip to main content

உதயநிதியால் மீண்டும் ஜொலிக்கும் நட்சத்திரம் - வெளியான விக்ரம் பட அப்டேட்

Published on 02/08/2022 | Edited on 02/08/2022

 

Dhruva Natchathiram movie shoot revive soon

 

கோப்ரா, பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ள விக்ரம் அடுத்ததாக பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் 61 படத்தில் நடிக்கவுள்ளார். பிரிட்டிஷ் காலகட்டத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக உள்ள இப்படத்தின் பணிகள் பூஜையுடன் சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. இதனிடையே  நடிகர் விக்ரம் இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் 90 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் சில பிரச்சனை காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகியும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க படாமல் இருந்தது.


 

ad

 

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. சியான் 61 படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்னரே இப்படத்தின் படப்பிடிப்பை முடிக்க விக்ரம் திட்டமிட்டுள்ளாராம்.  அதற்காக நடிகர் விக்ரம் துருவ நட்சத்திரம் படத்திற்காக 15 நாள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளாராம். இதனை உறுதி செய்யும் வகையில் கெளதம் மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்ரமுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். கோப்ரா  படத்தைத் தொடர்ந்து துருவ நட்சத்திரம் படத்தின் வெளியிட்டு உரிமையையும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகவும், அதனால்தான் இப்படத்தின் பணி மீண்டும் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீர தீர சூரனாக மாறிய விக்ரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
vikram 62 title as Veera Dheera Sooran

தமிழ் சினிமா ஹீரோவில், ஹேட்டர்ஸே இல்லாத எல்லா தரப்பு மக்களுக்கும் பிடித்தமான நடிகராக வலம் வருபவர் விக்ரம். தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு உயிரூட்டும் வகையில் தனது அர்ப்பணிப்பை கொடுக்கும் முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர். முன்னணி நடிகர் என்ற அந்தஸ்து பெற்றாலும் தொடர்ச்சியாக வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். அவர் நடித்த காசி, பிதாமகன், அந்நியன், தெய்வத்திருமகள், ஐ உள்ளிட்ட படங்கள் அவரது அர்ப்பணிப்பிற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன. 

அந்த வரிசையில் தற்போது தங்கலான் படம் உருவாகி வருகிறது. மேலும் சித்தா பட இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். இந்தச் சூழலில் இன்று பிறந்தநாள் காண்கிறார் விக்ரம். அதனால் ரசிகர்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தங்கலான் படக்குழு, விக்ரமிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு ஸ்பெஷல் வீடியோவை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து தற்போது அருண் குமார் படக்குழு தற்போது படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டுள்ளது. ரியா ஷிபு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு ஒரு ப்ரோமோ வீடியோவுடன் கடந்த அக்டோபரில் வெளியானது. மேலும் துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

இப்படத்திற்கு ‘வீர தீர சூரன்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் டைட்டில் டீசர், படத்தின் ஒரு காட்ச்சியை கட் செய்து வைத்துள்ளனர். விக்ரமை கொலை செய்ய ஒரு கும்பல், திட்டமிட்டு அவர் வேலை பார்க்கும் மளிகை கடைக்கு செல்கிறது. ஆனால் அக்கும்பலை விக்ரம் துப்பாக்கியால் தாக்குகிறார். இந்த டீசர் தற்போது ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. 

Next Story

சர்ப்ரைஸ் கொடுத்த தங்கலான் படக்குழு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
pa.ranjith Thangalaan Vikram Birthday Tribute Video

தமிழ் சினிமா ஹீரோவில், ஹேட்டர்ஸே இல்லாத எல்லா தரப்பு மக்களுக்கும் பிடித்தமான நடிகராக வலம் வருபவர் விக்ரம். தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு உயிரூட்டும் வகையில் தனது அர்ப்பணிப்பை கொடுக்கும் முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர். முன்னணி நடிகர் என்ற அந்தஸ்து பெற்றாலும் தொடர்ச்சியாக வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். அவர் நடித்த காசி, பிதாமகன், அந்நியன், தெய்வத்திருமகள், ஐ உள்ளிட்ட படங்கள் அவரது அர்ப்பணிப்பிற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன. 

அந்த வரிசையில் தற்போது தங்கலான் படம் உருவாகி வருகிறது. இந்த சூழலில் இன்று பிறந்தநாள் காண்கிறார் விக்ரம். அதனால் ரசிகர்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தங்கலான் படக்குழு, விக்ரமிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு ஸ்பெஷல் வீடியோவை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளது. அதில் அவரது கதாபாத்திரத்திற்காக அவர் தயாராகும் முறையை மற்றும் அவரது அர்ப்பணிப்பை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த வீடியோ தற்போது படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. 

pa.ranjith Thangalaan Vikram Birthday Tribute Video

இப்படத்தை பா. ரஞ்சித் இயக்கி வரும் நிலையில், விக்ரமோடு பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கோலார் தங்க வயலை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ள நிலையில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் தள்ளி போய் இம்மாதம் வெளியாவதாக பின்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் ரிலீஸ் தேதி அறிவித்தபாடில்லை. இந்த சூழலில் தற்போது வெளியாகியுள்ள ஸ்பெஷல் வீடியோவில் விரைவில் இப்படம் வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.