Skip to main content

'கேப்டன் மில்லர்' - வெளியான அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டம்

Published on 02/07/2022 | Edited on 02/07/2022

 

dhanush next movie Captain Miller official announcement

 

செல்வராகவன் இயக்கும் 'நானே வருவேன்' படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ் தற்போது 'வாத்தி' படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் இப்படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இதனிடையே அருண் மாதேஸ்வரன் இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இப்படத்தை 'சத்யா ஜோதி ஃபிலிம்ஸ்' சார்பாக தியாகராஜன் தயாரிக்கிறார்.

 

இந்நிலையில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி தனுஷ் நடிக்கும் இப்படத்திற்கு கேப்டன் மில்லர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜி.வி பிரகாஷ் இசையமைக்கவுள்ள இப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து நடிகர் தனுஷ் வாத்தி படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகு கேப்டன் மில்லர் படத்தில் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தனுஷ் தொடர்பான வழக்கை முடித்து வைத்த நீதிமன்றம்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024

 

dhansuh madurai kathiresan meenakshi case update

மதுரையைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் நடிகர் தனுஷ் தனது மகன் என்று மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இவ்வழக்கை ரத்து செய்ய வேண்டும் என நடிகர் தனுஷ் தரப்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

இதனையடுத்து கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர், கஸ்தூரிராஜா தங்களை கொலை செய்ய முயற்சிப்பதாகவும், நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து உத்தரவுகளை பெற்று விட்டதாகவும் கூறி தனுஷுக்கும், கஸ்தூரிராஜாவுக்கும் நோட்டீஸ் அனுப்பினர். பின்பு கஸ்தூரிராஜா மற்றும் தனுஷ் தரப்பு இந்த குற்றச்சாட்டுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் ரூ. 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர நேரிடும் என கதிரேசன் - மீனாட்சி தம்பதியினருக்கு நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்பட்டது. ஆனால் கதிரேசன் - மீனாட்சி தரப்பு எங்களுக்கு இது குறித்து எந்தவிதமான நோட்டீஸும் வரவில்லை என மறுத்தனர். 

dhansuh madurai kathiresan meenakshi case update

பிறகு கதிரேசன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் குற்றவியல் சீராய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், "நடிகர் தனுஷ் என் மகன் என நான் உரிமை கோரிய வழக்கில் தனுஷ் தரப்பு உயர்நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்தனர். இது தொடர்பாக மதுரை 6ஆவது நீதித்துறை நடுவர் மன்றத்தில், தனுஷ் மீது வழக்குப்பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்தேன். என் வழக்கை நீதித்துறை நடுவர் தள்ளுபடி செய்தார்.

இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தனுஷ், இயக்குநர் கஸ்தூரிராஜாவின் மகன் தான் என்ற முடிவுக்கு வரவில்லை. மேலும் தனுஷ் தரப்பு ஆவணங்களில் போலி ஆவணங்கள் இருப்பதாக உயர்நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததற்காக தனுஷ் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரிய என் மனுவை தள்ளுபடி செய்து கீழ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் என் வழக்கை விசாரிக்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு, நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த போது, வழக்கு தொடர்பான ஆவணங்களை மதுரை 6ஆவது நீதித்துறை நடுவர் மன்றத்திடம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

இந்த மனு நீதிபதி கே.கே ராமகிருஷ்ணன், முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தவறான உள்நோக்கத்துடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிபதி, குற்றச்சாட்டை நிரூபிக்க எந்தவித ஆதாரங்களும் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் இது ஒரு அபத்தமான வழக்கு என்பதால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார். 

Next Story

வித்தியாசமான லுக்கில் தனுஷ் - அப்டேட் வெளியிட்ட படக்குழு

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
dhanush 51 movie Kubera first look update

கேப்டன் மில்லர் படத்தைத் தொடர்ந்து தற்போது தனது 50 ஆவது படப் பணிகளைக் கவனித்து வருகிறார் தனுஷ். அவரே இயக்கி நடிக்கும் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துள்ளது. இதைத் தவிர்த்து ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். மேலும் ஹீரோவாக சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் ஒரு படம், இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படம் எனக் கைவசம் வைத்துள்ளார். 

இதில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் படம் தனுஷின் 51வது படமாக உருவாகிறது. படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி பின்பு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பூஜை நடைபெற்றது. இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் பூஜையுடன் தொடங்கியது. அதன்படி திருப்பதியில் நடந்தபோது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதால் பரப்பரப்பானது. மேலும் அப்பகுதி மக்கள் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து, படப்பிடிப்பிற்கு தடை விதிக்கக் கோரி பாஜகவினர் திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து படப்பிடிப்பிற்காக வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து வேறொரு இடத்தில் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.  

இந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது. குபேரா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் டைட்டில் லுக் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தனுஷ் முடி கலைந்து, தாடியுடன் அழுக்கான வித்தியாசமான தோற்றத்தில் இடம்பெற்றுள்ளார். இது தற்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.