Skip to main content

தனுஷ் தொடர்பான வழக்கு - நீதிமன்றம் புது உத்தரவு

Published on 30/11/2022 | Edited on 30/11/2022

 

dhanush madurai kathiresan case court new order

 

மதுரையைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் நடிகர் தனுஷ் தனது மகன் என்று மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இவ்வழக்கை ரத்து செய்ய வேண்டும் என நடிகர் தனுஷ் தரப்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

 

இதனையடுத்து கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர், கஸ்தூரிராஜா தங்களை கொலை செய்ய முயற்சிப்பதாகவும், நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து உத்தரவுகளை பெற்று விட்டதாகவும் கூறி தனுஷுக்கும், கஸ்தூரிராஜாவுக்கும்  நோட்டீஸ் அனுப்பினர். பின்பு கஸ்தூரிராஜா மற்றும் தனுஷ் தரப்பு இந்த குற்றச்சாட்டுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் ரூ. 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர நேரிடும் என கதிரேசன் - மீனாட்சி தம்பதியினருக்கு  நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்பட்டது. ஆனால் கதிரேசன் - மீனாட்சி தரப்பு எங்களுக்கு இது குறித்து எந்தவிதமான நோட்டீஸும் வரவில்லை என மறுத்தனர். 
 

பிறகு கதிரேசன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் குற்றவியல் சீராய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், "நடிகர் தனுஷ் என் மகன் என நான் உரிமை கோரிய வழக்கில் தனுஷ் தரப்பு உயர்நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்தனர். இது தொடர்பாக மதுரை 6வது நீதித்துறை நடுவர் மன்றத்தில், தனுஷ் மீது வழக்குப்பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்தேன். என் வழக்கை நீதித்துறை நடுவர் தள்ளுபடி செய்தார்.
 

இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தனுஷ், இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகன் தான் என்ற முடிவுக்கு வரவில்லை. மேலும் தனுஷ் தரப்பு ஆவணங்களில் போலி ஆவணங்கள் இருப்பதாக உயர்நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பதிவு எண் ஏதுமின்றி தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிறப்பு சான்றிதழை கருத்தில் கொள்ளாமல் வழக்கை தள்ளுபடி செய்தது ஏற்புடையது அல்ல. வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பார்த்த பின் முடிவெடுக்க வேண்டும். 

 

தனுஷின் பிறப்பு சான்றிதழின் உண்மை தன்மையை அறிய சான்றிதழை மதுரை மாநகராட்சிக்கு கீழ் நீதிமன்றம் அனுப்பியது. அதன் முடிவு வருவதற்குள் எனது மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது ஏற்கத்தக்கதல்ல. எனவே, போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததற்காக நடிகர் தனுஷ் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரிய என் மனுவை தள்ளுபடி செய்து கீழ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, என் வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

 

இந்நிலையில் இந்த மனு, நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கு தொடர்பான ஆவணங்களை மதுரை 6-வது நீதித்துறை நடுவர் மன்றத்திடம் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். அடுத்த கட்ட விசாரணையை அடுத்த மாதம் 13 ஆம் தேதிக்கு (13.12.2022) ஒத்திவைத்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'உயிருக்கும் ரிஸ்க்; நீர் நிலைக்கும் கேடு' - எல்லை மீறும் இன்ஸ்டா ரீல் அடிக்டர்ஸ்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
'Living Risk; Insta-reels that defy water levels

அண்மைக்காலமாகவே 'மாஸ்' என்ற பெயரில் ஆயுதங்களுடன் இளைஞர்கள், மாணவர்கள் நடந்து வருவது, தாக்குவது, ஆபத்தான முறையில் வாகனங்களில் பயணம் செய்வது போன்ற ரீல்ஸ் வீடியோக்கள் வெளியாகி நடவடிக்கைகளுக்கு உள்ளாகி வருகிறது.

காவல்நிலையத்தின் வாயில்களில் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் காவல்நிலையத்திலிருந்து வெளியே வருவதுபோல ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் பலர் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளது. இவ்வாறு விதிமீறலில் ஈடுபட்ட இன்ஸ்டா ரீல் வெளியிடும் இளைஞர்கள் அவ்வப்போது கைதாகும் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மதுரையில் இளைஞர் ஒருவர் நீர் நிலையில் மிகவும் ஆபத்தான முறையில் இன்ஸ்டா வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த இளைஞரையும் அதற்கு உதவியவர்களையும் கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது. மதுரை வைகை ஆற்றில் தண்ணீரில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து அந்த நெருப்புக்குள் குதித்து வீடியோ எடுத்து அதனை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இளைஞர் ரீல்ஸாக வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் நண்பர்கள் உதவியுடன் வைகை ஆற்றில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு அந்த நெருப்பிற்கு நடுவில் அந்த இளைஞர் குதிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. ரீல்ஸ் மோகத்தால் இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வரும் நிலையில், இது ரீல்ஸ் எடுப்பவர்களின் உயிருக்கு கேடு விளைவிப்பதோடு மட்டுமல்லாது, நீர்நிலைகளில் பெட்ரோல் போன்ற பொருட்களை ஊற்றுவதால் நீர்நிலைகளும் மாசு அடையும். எனவே இதுபோன்ற நபர்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story

சேவை நேரத்தில் சேலை செலக்சன்;ஆரம்ப சுகாதார நிலையத்தில் அலட்சியம்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Selection of saree during service; Negligence at primary health facility

மதுரையில் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில் நோயாளிகளை காக்க வைத்து விட்டு செவிலியர்கள் சேரி செலக்சன் செய்து கொண்டிருந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் நோயாளிகளை கவனிக்காமல் சேலை செலக்சன் செய்வதற்காக சென்றதாக அங்கு வந்த நோயாளிகள் பரபரப்பாக குற்றம்சாட்டி இருந்தனர். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என விளக்கம் அளித்திருந்தது.

இந்தநிலையில் இது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று வெளியாகி உள்ளது. மருத்துவ உதவிக்காக வந்த சிலர் எடுத்துள்ள அந்த வீடியோ காட்சியில் செவிலியர்கள் அறையில் சேலை வியாபாரம் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், அங்கு சேலைகளை தேர்வு செய்ய செவிலியர் அமர்ந்திருந்தார். 'யாம்மா அரை மணி, ஒரு மணி நேரமா நோயாளிங்க காத்திருக்காங்க. இத வியாபாரம் பண்ணதான் நீங்க சம்பளம் வாங்குறீங்களா? ஒரு மணிநேரமா பேஷண்ட வச்சுக்கிட்டு இப்படியா பண்ணுவீங்க' என ஆதங்கத்துடன் அங்கிருந்தவர்கள் கேள்வி எழுப்பினர். வீடியோ எடுப்பதை சுதாரித்த செவிலியர் கீழே கிடந்த சேலைகளை எடுத்து பைகளில் போட்டுக்கொண்டார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.