Skip to main content

மாஸ் என்றால் என்ன? தனுஷின் நெகிழ வைக்கும் விளக்கம்

Published on 08/08/2022 | Edited on 12/08/2022

 

dhanush explain mass Thiruchitrambalam Audio launch

 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கும் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்துள்ளார். நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், பிரகாஷ்ராஜ், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் வரும் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

 

இதனையொட்டி அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பேசிய தனுஷ், எது மாஸ் என்று நெகிழ வைக்கும் விளக்கத்தை கொடுத்துள்ளார். அதில், உங்களையெல்லாம் இப்படி பார்த்து ஒன்றை வருசமாச்சு. சரி ஒன்றை வருடம் கழித்து என் படம் வருகிறது. அது மாஸான படமாக வந்த நல்ல இருக்கும்னு சொன்னாங்க. சாரி மாஸ்ன்னா என்ன? ஒரு ஹீரோ பத்து பேர அடிச்சிட்டு கெத்தா நின்னா அது மாஸ்,  ஒரு ஹீரோ செஞ்சிருவன்னு பஞ்ச் டயலாக் பேசுனா அது மாஸ், இல்ல கடைசி நேரத்தில் ஆபத்துல இருக்குறவங்கள காப்பாத்துனா மாஸ்.

 

ஆனால் இது எல்லாத்தையும் தாண்டி ஒரு மாஸ் இருக்கு. அது என்னென்ன நம்ம குழந்தையா இருக்கும்போது நம்மள வளர்க்கிற அப்பா அம்மா,  வயசான பிறகு அவங்க குழந்தையா மாறிடுறாங்க. அவங்கள நல்லபடியா குழந்தையா பார்த்துக்கிட்டா அது மாஸ், கடைசி வரைக்கும் செய்த நன்றியை மறக்காம இருந்தா அது மாஸ், நம்ம மேல தப்பு இல்லைன்னா கூட ஒரு பிரச்சனை சரியாக வேண்டும் என்று இறங்கி வந்து மன்னிப்பு கேட்ட அது  மாஸ், நாம நண்பன் உதவின்னு கேட்ட உடனே கைல காசு இல்லனா கூட கழுத்துல இருக்குற செயினை அடமானம் வைத்து காசு கொடுத்தா அது மாஸ். அப்படி பார்த்தா திருச்சிற்றம்பலம் ஒரு பயங்கரமான மாஸ் படம்தான்" என்றார். இதை கேட்ட அரங்கத்தில் இருந்த தனுஷ் ரசிகர்கள் கைதட்டி கரகோஷத்தை எழுப்பினர்.

 

 

சார்ந்த செய்திகள்