Skip to main content

தனுஷ் படக்குழுவுக்கு தடை விதித்த மாவட்ட ஆட்சியர்

Published on 25/04/2023 | Edited on 25/04/2023

 

dhanush captain miller shooting issue thenkasi District Collector order

 

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். 'சத்ய ஜோதி ஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கோக்கன், மூர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். 1940களின் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அண்மையில் 'ஆர்.ஆர்.ஆர்' படப் பிரபலமான அமெரிக்க நடிகர் எட்வர்ட் சோனென்ப்ளிக் இணைந்துள்ளதாக அறிவித்தது.

 

படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் தென்காசியில் உள்ள வனப்பகுதி மற்றும் அங்குள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகப் பகுதியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் இரவு நேரப் படப்பிடிப்பின் போது ராட்சத உபகரணத்தை படக்குழு பயன்படுத்தி வருவதால் அப்பகுதியைச் சேர்ந்த மக்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையூறு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

 

இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் படக்குழுவுக்கு எதிராகப் புகார் மனு கொடுத்துள்ளதாக கடந்த மாதம் தகவல் வெளியானது. இந்த நிலையில், மத்தளம்பாறையில் வெடிகுண்டு வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டுள்ளதாக வந்த தகவல் அப்பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்த, தகவலறிந்த மாவட்ட நிர்வாகம் விசாரணை மேற்கொண்டுள்ளது. அதில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளதாம். இதன் அடிப்படையில் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பபை அப்பகுதியில் நடத்த தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

குற்றாலத்தில் மதுபோதையில் அட்டகாசம்; வைரலாகும் வீடியோ

Published on 09/07/2024 | Edited on 09/07/2024
Drunkenness in kutralam; A viral video

தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.  குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து திடீர் திடீரென அதிகரிப்பதும் வாடிக்கையாகி வருகிறது. அந்தந்த வானிலை நேரங்களை கணக்கிட்டு நீர்வரத்தை பொறுத்து குற்றால அருவியில் குளிப்பதற்கு தடையும் அனுமதியும் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகிறது. போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பில் குற்றால அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டு வருகிறது.

தென்காசி குற்றால அருவியில் தற்போது சீசன் தொடங்கியுள்ளது. இந்நிலையில் அருவியில் குளிக்க வந்த இடத்தில் மது குடித்துவிட்டு சிலர் மது போதையில் அங்கிருந்த காவலர்களிடம் வம்பிழுத்த நிலையில் போதை இளைஞர்களை காவல்துறையினர் குளித்துக் கொண்டிருந்த மேனியோடு அழைத்துச் சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. அந்த வீடியோ காட்சியில் ''குளிக்க வந்தா குளிக்க தானே செய்யணும் எதற்கு இவ்வளவு போதை உனக்கு. நான் போலீஸ்னு சொல்கிறேன் சட்டை புடிச்சு இழுக்குறீங்க. என்ன பண்ணிட்டிருக்க'' என போலீசார் கேட்க, 'நான் மாடு மேய்க்கிறேன்' என போதை இளைஞர் பதில் சொல்லும் இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Next Story

வெளியான பாடல்; ராயனைக் கொண்டாடும் ரசிகர்கள்!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
Raayan 3rd song released

முன்னணி நடிகரான தனுஷ், தற்போது தனது 50வது படமான ‘ராயன்’ படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்தப் படத்தில், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் ‘அடங்காத அசுரன்’ எனும் பாடல் கடந்த மே 9ஆம் தேதி வெளியாகி, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்தது. இப்பாடலை தனுஷ் எழுதியிருக்க தனுஷ், ஏ.ஆர் ரஹ்மான் இருவரும் பாடியிருந்தனர்.  இதனை தொடர்ந்து, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் ஸ்வேதா மோகன் இணைந்து பாடிய ‘வாட்டர் பாக்கெட்’ பாடல் வெளியானது. கானா காதர் எழுதியுள்ள இப்பாடல் கானா ஸ்டைலில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற ஜூலை 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. 

இந்த நிலையில்,  ‘ராயன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற நாளை (06-7-24) சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட இருக்கிறது. இந்த விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதற்கிடையில், இப்படத்தின் மூன்றாவது பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகியிருக்கிறது.  ‘ராயன் ரம்புள்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்பாடல், குத்து பாடலாகவும் ராப் (Rap) பாடலாகவும் இருக்கிறது. கேங்க்ஸ்டர் கதை அம்சம் கொண்ட இப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல், தீம் மியூசிக்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிவு எழுதி பாடியிருக்கும் இப்பாடலை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.