/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/93_41.jpg)
அருண் மாதேஸ்வரன் இயக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தில் பிசியாக நடித்து வருகிறார் தனுஷ்.'சத்ய ஜோதி ஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கோக்கன், மூர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின்படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தைஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்தயாரிக்கதமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உள்ளிட்ட மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகவுள்ளதாகபடக்குழு தெரிவித்தது. இதையடுத்துமாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தை தனுஷின்'வொண்டர்பார் ஃபில்ம்ஸ்'நிறுவனம் தயாரிக்கிறது.
இதனிடையே தனது50வது படத்திலும்கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இப்படத்தைசன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை தனுஷேஇயக்கி நடிக்கவுள்ளார் எனவும்காளிதாஸ் ஜெயராம், விஷ்ணு விஷால் மற்றும் துஷாரா விஜயன் நடிப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யாவும், நடிகர்சந்தீப் கிஷனும் இப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)