Skip to main content

தனுஷ் தொடர்பான வழக்கு - மீண்டும் விசாரணை தள்ளி வைப்பு

Published on 05/01/2023 | Edited on 05/01/2023

 

dhansuh madurai kathiresan case

 

மதுரையைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் நடிகர் தனுஷ் தனது மகன் என்று மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இவ்வழக்கை ரத்து செய்ய வேண்டும் என நடிகர் தனுஷ் தரப்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.  

 

இதனையடுத்து கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர், கஸ்தூரிராஜா தங்களை கொலை செய்ய முயல்வதாகவும், நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து உத்தரவுகளைப் பெற்றுவிட்டதாகவும் கூறி தனுஷுக்கும், கஸ்தூரிராஜாவுக்கும்  நோட்டீஸ் அனுப்பினர். பின்பு இந்தக் குற்றச்சாட்டுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர நேரிடும் என கதிரேசன் - மீனாட்சி தம்பதியினருக்கு கஸ்தூரிராஜா மற்றும் தனுஷ் தரப்பு நோட்டீஸ் அனுப்பியதாகக் கூறப்பட்டது. ஆனால் கதிரேசன் - மீனாட்சி தரப்பு எங்களுக்கு இது குறித்து எந்த விதமான நோட்டீஸும் வரவில்லை என மறுத்தனர். 

 

பிறகு கதிரேசன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் குற்றவியல் சீராய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், "நடிகர் தனுஷ் என் மகன் என நான் உரிமை கோரிய வழக்கில் தனுஷ் தரப்பு உயர்நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்தனர். இது தொடர்பாக மதுரை 6வது நீதித்துறை நடுவர் மன்றத்தில், தனுஷ் மீது வழக்குப்பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்தேன். என் வழக்கை நீதித்துறை நடுவர் தள்ளுபடி செய்தார்.

 

இந்த வழக்கில் உயர்நீதிமன்றம், தனுஷ் இயக்குநர் கஸ்தூரிராஜாவின் மகன்தான் என்ற முடிவுக்கு வரவில்லை. மேலும் தனுஷ் தரப்பு ஆவணங்களில் போலி ஆவணங்கள் இருப்பதாக உயர்நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பதிவு எண் எதுவுமின்றி தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிறப்பு சான்றிதழை கருத்தில் கொள்ளாமல் வழக்கை தள்ளுபடி செய்தது ஏற்புடையது அல்ல. வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பார்த்த பின் முடிவெடுக்க வேண்டும். 

 

தனுஷின் பிறப்பு சான்றிதழின் உண்மைத் தன்மையை அறிய சான்றிதழை மதுரை மாநகராட்சிக்கு கீழ் நீதிமன்றம் அனுப்பியது. அதன் முடிவு வருவதற்குள் எனது மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது ஏற்கத்தக்கதல்ல. எனவே, போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததற்காக நடிகர் தனுஷ் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரிய என் மனுவை தள்ளுபடி செய்து கீழ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, என் வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

 

இந்த மனு, நீதிமன்றத்தில் கடந்த நவம்பர் மாதம் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பான ஆவணங்களை மதுரை 6வது நீதித்துறை நடுவர் மன்றத்திடம் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அடுத்தகட்ட விசாரணையில் வழக்கு தொடர்பான ஆவணங்கள் பதிவுத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணையை வரும்  20ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

“ஜெயிச்ச கையோட வேற கட்சிக்கு போயிடாதீங்க...” - செல்லூர் ராஜு கிண்டல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Don't go to another party after winning'- Sellur Raju teased

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகம் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மருத்துவர் சரவணனை ஆதரித்து  மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசிக்கொண்டிருந்தபோது வேட்பாளர் சரவணன் கைகூப்பியபடி சிரித்தார். அதைப் பார்த்த செல்லூர் ராஜு,  'வலிக்கிற மாதிரி ஊசி போட்டுடாதீங்க. வலிக்காமல் ஊசி போடுங்க. தலைமை சொல்லிவிட்டால் அந்த கட்டளை தான் எல்லாமே. வேறு எதுவும் கிடையாது. இது சாமி என்றால் சாமி. சாமி இல்லை இது சாணி என்றால் சாணி. நம்மைப் பொறுத்தவரை மதித்தால் மதிப்பு, மரியாதை கிடைக்கும். மரியாதை கொடுக்கவில்லை என்றால் மிதிப்போம்' எனப் பேசியவர், வேட்பாளர் சரவணன் பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்தவர் எனக் குறிப்பிட்டு பேசியதோடு 'ஜெயித்த பிறகு வேறு கட்சிக்கு போய் விடக்கூடாது' என கிண்டலாகப் பேசினார்.