Skip to main content

சர்ச்சையான 'காளி' போஸ்டர்; கண்டனங்களை குவித்த பாஜக - இயக்குநர் மீது வழக்கு

Published on 04/07/2022 | Edited on 04/07/2022

 

delhi police complaints filed director leena manimekalai

 

பிரபல தமிழ் எழுத்தாளரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை சமூக நலன் சார்ந்த போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்பதோடு, அது சார்ந்த ஆவணப்படங்களையும் இயக்கியுள்ளார். அந்த வகையில் வெளியான செங்கடல், மாடத்தி ஆகிய படங்கள் பெரும் வரவேற்பை பெற்றதோடு,  விவாதங்களையும் கிளப்பியது.

 

இதையடுத்து இயக்குநர் லீனா மணிமேகலை மீண்டும் ஒரு ஆவணப்படத்தை காளி என்ற பெயரில் இயக்கியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த போஸ்டரில் இந்துக்களின் தெய்வமான காளி வேடம் அணிந்த பெண் வாயில் சிகிரெட்டுடன், கையில் எல்ஜிபிடி கொடியை பிடித்தவாறு இருக்கிறது. இது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் இயக்குநர் லீனா மணிமேகலை இந்து மதத்தை அவமதிப்பதாகவும், அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பலரும் புகார் கூறி வருகின்றனர். குறிப்பாக பாஜகவினர் மற்றும் இந்துத்துவவாதிகள் இயக்குநர் மணிமேகலைக்கு எதிராக கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். 

 

இந்நிலையில் டெல்லி போலீஸ்  இயக்குநர் லீனா மணிமேகலை மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும் லீனா மணிமேகலைக்கு எதிராக ஏகப்பட்ட புகார்கள் வந்ததன் அடிப்படையில் வழக்கு பதியப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

இதனிடையே இயக்குநர் லீனா மணிமேகலை, “எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. இருக்கும் வரை எதற்கும் அஞ்சாமல் நம்புவதைப் பேசும் குரலோடு இருந்துவிட விரும்புகிறேன். அதற்கு விலை என் உயிர் தான் என்றால் தரலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.  மற்றொரு பதிவில், "ஒரு மாலைப்பொழுது, டோரொண்டோ மாநகரத்தில காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடக்கிற சம்பவங்கள் தான் படம். படத்தைப்பார்த்தா “arrest leena manimekalai” hashtag போடாம “love you leena manimekalai” hashtag போடுவாங்க" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"பாலியல் குற்றச்சாட்டுகள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்" - குஷ்பு

Published on 17/06/2023 | Edited on 17/06/2023

 

khusboo says police action taken immediately for women complaints

 

தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினரும் பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினருமான நடிகை குஷ்பு தமிழ்நாடு சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபி சங்கரை சந்தித்து 2021 முதல் தமிழகத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்கள் அடங்கிய கோப்பை ஒப்படைத்தார். மேலும் இந்த வழக்குகள் எந்த நிலையில் உள்ளன. புகார்கள் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். இது தொடர்பான விரிவான அறிக்கையை ஒரு மாதத்துக்குள் ஒப்படைப்பதாகக் கூடுதல் டிஜிபி சங்கர், குஷ்புவிடம் உறுதியளித்தார்.

 

இதையடுத்து குஷ்பு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தேசிய மகளிர் ஆணையம் சார்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் கிடப்பில் உள்ள வழக்குகள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கூடுதல் டிஜிபி சங்கரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டேன். அவரும் இதுகுறித்து ஒரு மாதத்தில் அறிக்கை அளிப்பதாக உறுதியளித்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார்  700க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

 

தேசிய மகளிர் ஆணையம் தானாக முன் வந்து பதிவு செய்த 26 வழக்குகள் நிலுவையில் உள்ளன. காவல்துறையினர் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று  தேசிய மகளிர் ஆணையத்திற்கு புகார்கள் வருகின்றன. அதிலும் குறிப்பாக வரதட்சணை கொடுமை வழக்குகள் தான் அதிகமாக உள்ளன. பெண்கள் அளிக்கும் வரதட்சணை மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான புகார்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார். 

 

 

Next Story

‘மீ டூ’ விவகாரம்; இயக்குநர் மீது லீனா மணிமேகலை பொய் குற்றச்சாட்டு - விசாரணையில் அம்பலம்

Published on 08/03/2023 | Edited on 08/03/2023

 

leena manimekalai susi ganesan issue

 

பிரபல எழுத்தாளரும் இயக்குநருமான லீனா மணிமேகலை ‘மீ டூ’ விவகாரம் கீழ், தானும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி இயக்குநர் சுசி கணேசன் மீது புகார் அளித்திருந்தார். நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இதனிடையே லீனா மணிமேகலையின் புகாரை எதிர்த்து சுசி கணேசன் மான நஷ்ட வழக்கு தொடுத்திருந்தார். 

 

இதையடுத்து லீனா மணிமேகலை தனது சமூக வலைத்தள பக்கத்தில் சுசி கணேசனால் தன் உயிருக்கு ஆபத்து என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவு சர்ச்சையை கிளப்பியது. இதைத் தொடர்ந்து இயக்குநர் சுசி கணேசன், கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் லீனா மணிமேகலை மீது புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், “தன் மீது பொய் புகார் கூறியுள்ளார். மேலும் சாதி மத மோதலை தூண்டும் விதமாகப் பேசி வருகிறார். இந்த குற்றச்சாட்டில் இருக்கும் உண்மையை கண்டறிந்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் புகார் அளித்திருந்தார்.  

 

அந்த புகார் தொடர்பாக லீனா மணிமேகலைக்கு சம்மன் அனுப்பப்பட்டு அவர் அளித்த புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்டது காவல்துறை. விசாரணையில் சுசீந்திரன் மீது லீனா மணிமேகலை முன்வைத்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை எனத் தெரிய வந்துள்ளது. காழ்ப்புணர்ச்சி காரணமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அங்கு பிரச்சனையை தீர்த்துக் கொள்ளுமாறும் சுசி கணேசனை நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தியும் புகாரை முடித்து வைத்தது காவல்துறை.

 

மேலும், காளி பட போஸ்டர் சர்ச்சையால் லீனா மணிமேகலை மீது பல்வேறு மாநிலங்களில் வழக்கு பதியப்பட்டுள்ளது. லீனா மணிமேகலை தற்போது கனடாவில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.