Skip to main content

அருள்நிதிக்கு கைகொடுத்த விஜய் சேதுபதி, வெங்கட் பிரபு, தமன்!

Published on 21/07/2021 | Edited on 21/07/2021

 

hdhdrhedhr

 

மாறுபட்ட கதைகளைத் தேர்வுசெய்து நடித்துக்கொண்டிருக்கும் நடிகர்களில் நடிகர் அருள்நிதியும் ஒருவர். இவர் தற்போது 'தேஜாவு' (DEJAVU) எனும் திரைப்படத்தில் நடித்துவருகிறார். மிஸ்டரி த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் மதுபாலா, அச்சுத குமார், ஸ்முருதி வெங்கட், மைம் கோபி, காளி வெங்கட், சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகின்றனர். ‘தேஜாவு’ படத்தினை அறிமுக இயக்குநரான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்குகிறார். இப்படத்தினை வைட் கார்பெட் ஃபிலிம்ஸ் சார்பில் கே. விஜய் பாண்டி தயாரிக்கிறார். 

 

அவருடன் இணைந்து பிஜி மீடியா ஒர்க்ஸ் சார்பில் பிஜி முத்தையா இணை தயாரிப்பை மேற்கொள்வதுடன், ஒளிப்பதிவையும் கையாள்கிறார். ஜிப்ரான் இசையில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் தயாராகிவருகிறது. இப்படத்தின் தெலுங்கு பதிப்பில் நவீன் சந்திரா கதாநாயகனாக நடித்துவருகிறார். தற்போது இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், இன்று (21.07.2021) அருள்நிதியின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் தமன் ஆகியோர் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். இது தற்போது வைரலாகிவருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய அருள்நிதி படக்குழு

Published on 27/07/2022 | Edited on 27/07/2022

 

Arulnidhi

 

வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவான 'தேஜாவு' திரைப்படம் கடந்த 22ஆம் தேதி வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படத்தின் வெற்றியை படக்குழுவினர் இன்று கேக் வெட்டி கொண்டாடினர்.

 

'தேஜாவு' வெற்றி குறித்து அருள்நிதி கூறுகையில், "இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். படத்தின் தயாரிப்பாளர் விஜய் பாண்டி இப்படத்தினை நன்றாக விளம்பரப்படுத்தி பொது மக்களிடம் சரியான முறையில் கொண்டு சேர்த்து, இதனை வெற்றிப் படமாக்கியுள்ளார். இத்தருணத்தில் அவருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசனுக்கு சிறந்த அங்கீகாரம் கிடைத்ததில் மகிழ்ச்சி. இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் 'தேஜாவு'  திரைப்படம் ஒரு நல்ல அடையாளமாக இருக்கும். இப்படத்தை வெற்றி படமாக்கிய அனைவருக்கும் நன்றி" எனக் கூறினார்.

 

படத்தின் வெற்றி குறித்து தயாரிப்பாளர் விஜய் பாண்டி கூறுகையில் "எனது நிறுவனத்தின் முதல் திரைப்படமே தரமான வெற்றிப் படமாக அமைந்ததில் பெரும் மகிழ்ச்சி. இப்படத்தினை எனக்கு அளித்த அருள்நிதிக்கும், இதனை தரமான படமாக அளித்த இயக்குநர் அரவிந்த் மற்றும் படக்குழுவினருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தின் டீசர், ட்ரைலரை வெளியிட்டு படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைக்க காரணமாக இருந்த உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி” எனத் தெரிவித்தார்.

 

 

Next Story

அருள்நிதி படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்

Published on 10/06/2022 | Edited on 10/06/2022

 

Change in the release date of the  Arulnithi movie

 

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் அருள்நிதியும் ஒருவர். 'களத்தில் சந்திப்போம்' படத்தைத் தொடர்ந்து 'டைரி', 'டி ப்ளாக்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் உருவாகும் 'தேஜாவு' படத்தில் நடித்து முடித்துள்ளார். மதுபாலா, ஸ்ம்ருதி வெங்கட், மைம் கோபி, காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'வைட் கார்பெட் ஃபிலிம்ஸ்' மற்றும் 'பிஜி மீடியா ஒர்க்ஸ்' இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.  

 

இந்நிலையில் 'தேஜாவு' படத்தின் ரிலீஸ் தேதியைத் தற்போதுப் படக்குழு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே ஜூன் மாதம் இப்படம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் தற்போது ரீலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டு வருகிற ஜூலை மாதம் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதோடு ஒரு புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டு படத்தின் ட்ரைலர் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளது.