Skip to main content

'புஷ்பா' பாடலுக்கு நடனமாடிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்... இணையத்தில் ட்ரெண்டாகும் வீடியோ 

Published on 22/01/2022 | Edited on 22/01/2022

 

David Warner danced pushpa movie song goes viral social media

 

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் 'புஷ்பா' படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, ஃபகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் படத்தின் அனைத்துப் பாடல்களும் பெரும்பாலான ரசிகர்களைக் கவர்ந்தது.

 

இந்நிலையில் 'புஷ்பா' படத்தில் இடம்பெற்ற 'ஸ்ரீ வள்ளி..." பாடலுக்கு நடிகர் அல்லு அர்ஜுன் போன்று நடனமாடி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ 10 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

ஏற்கனவே அல்லு அர்ஜுன் பூஜா ஹெக்டே இருவரும் நடனமாடிய 'புட்ட பொம்மா..." பாடலுக்கு கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது மனைவியுடன் நடனமாடி வீடியோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஆஸ்கரில் சந்திப்போம்” - வார்னரால் டென்ஷனான ராஜமௌலி  

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
ss rajamouli david warner ad viral

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், இந்தியாவிலும் ரசிகர்களை வைத்துள்ளார். முன்னதாக அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படம் பிரபலமடைந்த சமயத்தில் அல்லு அர்ஜுன் போல் வசனம் பேசி மற்றும் படத்தில் இடம்பெற்ற ‘ஸ்ரீ வள்ளி’ பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் செய்தும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இது இந்திய ரசிகர்கள் மத்தியில் பரவலாக ரசிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நிறைய இடங்களில் புஷ்பா படத்தில் இடம்பெறும் அல்லு அர்ஜுன் ஸ்டைலை செய்து மகிழ்ந்து வந்தார். மேலும், கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் பிறந்தநாளுக்கு புஷ்பா பட ஸ்டைலில் தனது குழந்தையுடன் சமூக வலைத்தளப் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் இயக்குநர் எஸ்.எஸ் ராஜமௌலியோடு இணைந்து ஒரு யுபிஐ விளம்பர படத்தில் நடித்துள்ளார். அந்த விளம்பரத்தில், வார்னரிடம் ஃபோன் பேசும் ராஜமௌலி, அவரின் மேட்ச் டிக்கெட்டுக்கு டிஸ்கவுன்ட் கிடைக்குமா என கேட்கிறார். அதற்கு பதிலளித்த வார்னர், உங்களிடம் சம்மந்தப்பட்ட யுபிஐ செயலி பெயரைச் சொல்லி, அது இருந்தால் கேஷ்பேக் கிடைக்கும் என்கிறார். உடனே, ராஜமௌலி, “என்னிடம் வழக்கமான யுபிஐ இருந்தால்...” என கேட்க, “அப்போது டிஸ்கவுன்ட் கிடைக்க நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்” என வார்னர் சொல்கிறார். 

உடனே வார்னரை வைத்து ராஜமௌலி படமெடுப்பதாக காட்டப்படுகிறது. அவரை நடிக்க வைக்க படாத பாடு படுகிறார் ராஜமௌலி. அதை ஜாலியாக வெவ்வேறு காட்சிகளைக் கொண்டு காட்டப்படுகிறது. ஒரு காட்சியில், “ஆஸ்கரில் சந்திப்போம்” என ராஜமௌலியிடம் வார்னர் சொல்கிறார். அதற்கு டென்ஷனாகி ராஜமௌலி வார்னரை பார்க்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

Next Story

காளி கெட்டப்பில் மிரட்டும் அல்லு அர்ஜுன்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
allu arjun pushpa 2 teaser released

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன், 'புஷ்பா’ படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். இந்த நிலையில், புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதை முடித்துவிட்டு அட்லி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று பிறந்தநாள் காண்கிறார் அல்லு அர்ஜுன். அவருக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் உள்பட பலரும் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் புஷ்பா 2 படக்குழு அல்லு அர்ஜுனுக்கு வாழ்த்து தெரிவித்து படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது. டீசரில் அல்லு அர்ஜுன், காளி கெட்டப்பில் திருவிழாவில் எதிரிகளை மிரட்டி சண்டை போடும் காட்சி இடம்பெறுகிறது.

‘புஷ்பா தி ரூல்’ என்ற தலைப்பில் உருவாகி வரும் இப்படத்தை முதல் பாகத்தை இயக்கிய சுகுமாரே இயக்கி வருகிறார். ஃபஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறது. இப்படத்தின் முன்னோட்ட வீடியோ மற்றும் ஃபர்ஸ்ட் லுக், கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இப்போது ஃபர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்ற அதே காளி கெட்டப்பில் படத்தின் டீசரிலும் அல்லு அர்ஜுன் தோன்றுகிறார்.