Skip to main content

ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசளிக்கும் தனுஷ்!

Published on 27/07/2021 | Edited on 27/07/2021

 

vdbdsbds

 

'கர்ணன்', 'ஜகமே தந்திரம்' ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் நடித்துக்கொண்டிருக்கும் படம் 'டி43'. ‘துருவங்கள் பதினாறு’, ‘மாஃபியா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கும் இப்படத்தில், தனுஷிற்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும், ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் இப்படத்தினைத் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். 

 

hfdhfd

 

இப்படத்தின் முன்தயாரிப்பு பணிகள் முடிந்து, படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இதையடுத்து தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், 'டி43' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நடிகர் தனுஷின் பிறந்தநாளான 28 ஜூலை (நாளை) காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு சார்பில் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் ரசிகர்களுக்குப் பிறந்தநாள் பரிசாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மீண்டும் ஓடிடியில் வெளியாகும் தனுஷ் படம்! 

Published on 15/01/2022 | Edited on 15/01/2022
jgfugug

 

இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் 'மாறன்' படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மகேந்திரன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட் என பலரும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 'மாறன்' படத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் இருவரும் பத்திரிகையாளராக நடித்துவருவதாக கூறப்படுகிறது. 

 

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில், படக்குழு இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டிவருகிறது. இந்நிலையில், 'மாறன்' படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இப்படம் விரைவில் ஹாட் ஸடார் ஓடிடி தளத்தில் வெளியாகிவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தனுஷின் ஜகமே தந்திரம் மற்றும் அத்ரங்கி ரே (கலாட்டா கல்யாணம்) ஆகிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

 

Next Story

அமெரிக்காவில் இருந்து டிப்டாப்பாக வந்து இறங்கிய தனுஷ்! வைரலாகும் போட்டோ!

Published on 01/07/2021 | Edited on 01/07/2021

 

vdgvdavadz

 

'கர்ணன்', 'ஜகமே தந்திரம்' ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிக்கவுள்ள படம் 'டி43'. ‘துருவங்கள் பதினாறு’, ‘மாஃபியா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கவுள்ள இப்படத்தில், தனுஷிற்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளார். மேலும் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் இப்படத்தினைத் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். 

 

இப்படத்தின் முன்தயாரிப்பு பணிகள் முடிந்து இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று (01.07.2021) ஆரம்பமாகியுள்ளது. ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா சென்றிருந்த நடிகர் தனுஷ், 4 மாதங்கள் கழித்து அமெரிக்காவில் இருந்து நேரடியாக ஐதராபாத் வந்தடைந்தார். அங்கு அவர் 'டி 43’ படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார். இவர் ஐதராபாத் விமான நிலையத்தில் வந்தடைந்த புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.