Skip to main content

ஹாலிவுட் இயக்குநரிடமிருந்து வந்த மேசேஜ் - நெகிழ்ந்து போன கார்த்திக் சுப்புராஜ்

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
Clint Eastwood about jigarthanda double x

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா, நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த தீபாவளியை முன்னிட்டு 10 ஆம் தேதி வெளியான படம்  'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. கார்த்திகேயன் சந்தானம் மற்றும் கதிரேசன் தயாரித்திருந்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. நடிகர் ரஜினி, படக்குழுவை பாராட்டி அறிக்கை வெளியிட்டார். மேலும் நேரில் அழைத்து பாராட்டினார். இவரை தவிர்த்து சீமான், ஷங்கர், சிம்பு, மாரி செல்வராஜ், அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட பலர் படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டினர். இப்படம் கடந்த 8 ஆம் தேதி தமிழ், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. 

இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் மற்றும் இயக்குநர் கிளிண்ட் ஈஸ்ட்வுட் தொடர்பாக ஒரு சின்ன கதை இடம்பெற்றிருந்த நிலையில், அவரையும் அனிமேஷன் மூலம் ஒரு காட்சியில் படக்குழு இணைத்திருந்தனர். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அதை சேர்த்துள்ளதாக கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்திருந்தார். இதையடுத்து எக்ஸ் பக்கத்தில் ஒரு ரசிகர் கிளிண்ட் ஈஸ்ட்வுட் பக்கத்தை டேக் செய்து, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் அவர் இடம்பெற்றிருப்பது குறித்து குறிப்பிட்டு நேரம் கிடைக்கும் பொழுது படத்தை பார்க்கும்படி பதிவிட்டிருந்தார். 

இவரின் பதிவிற்கு கிளிண்ட் ஈஸ்ட்வுட் பக்கத்திலிருந்து பதில் வந்துள்ளது. அதில் “கிளின்ட் இந்தப் படத்தைப் பற்றி அறிந்திருக்கிறார். மேலும் அவர் தனது புதிய படமான ஜூரி 2 படத்தை முடித்தவுடன் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பார்ப்பார்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இதை கார்த்திக் சுப்புராஜ், அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, நெகிழ்ச்சியடைந்துள்ளார். அந்த பதிவில், “லெஜெண்ட் கிளிண்ட் ஈஸ்ட்வுட் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பற்றி அறிந்திருப்பதும், விரைவில் பார்க்கவுள்ளதும் ரொம்ப நெகிழ்ச்சியாக உள்ளது. இப்படம் அவரது மில்லியன் கணக்கான ரசிகர்கள் சார்பாகவும் என்னுடைய இதயப்பூர்வமான அர்ப்பணிப்பு. அவர் படம் பற்றி என்ன கூறுவார் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்” என குறிப்பிட்டு அந்த ரசிகருக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பட ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் ராகவா லாரன்ஸும் கிளிண்ட் ஈஸ்ட்வுட்டிடமிருந்து வந்த பதிவிற்காக அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

கோலிவுட்டில் மூன்றாவது படம் - சூர்யாவிற்கு ஜோடியான பூஜா ஹெக்டே

Published on 01/06/2024 | Edited on 01/06/2024
pooja hegde to pair with suriya in karthik subbaraj new movie

சூர்யா தற்போது தனது 42வது படமான ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  3டி முறையில் சரித்திரப் படமாக 38 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. சமீபத்தில் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் வருகிற ஏப்ரலில் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இப்படத்தைத் தொடர்ந்து தனது 43வது படத்திற்காக சுதா கொங்கராவுடன் கூட்டணி வைத்தார். இப்படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மா உள்ளிட்ட பிரபலங்களும் கமிட்டாகினர். கடந்த அக்டோபர் மாதம் வெளியான அறிவிப்பு வீடியோவில், படத்தின் தலைப்பு மறைக்கப்பட்டு 'புறநானூறு' என்ற டேக் லைன் மட்டும் இடம் பெற்றிருந்தது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ள நிலையில் அவருக்கு 100வது படமாக அமைந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் உள்ள கல்லூரியில் தொடங்கவுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் இப்படத்திற்கு நேரம் அதிகம் தேவைப்படுவதாகக் கூறி படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. 

இதற்கிடையில் திடிரென்று கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. மேலும் சூர்யாவின் 44ஆவது படமாக இப்படம் உருவாகும் என்றும் சூர்யாவின் 2டி நிறுவனமும் கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இப்படத்தில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் நடிக்கவுள்ளதாகவும் ஜூன் இடையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. 

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளதாக அவரது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு அறிவித்தது. பின்பு முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானி தொடங்குவதாகவும் ஆக்‌ஷன் காட்சிகள் எடுக்கப்படவுள்ளதாகவும் அறிவித்தது. அங்குப் பிரம்மாண்ட செட் போடப்பட்ட வீடியோவும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இப்படத்தில் ஹூரோயின் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி பூஜா ஹெக்டே இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். பூஜா ஹெக்டே கடைசியாக தமிழில் விஜய்யின் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இதுவரை முகமூடி, பீஸ்ட் என இரண்டு தமிழ்ப் படங்களிலே நடித்துள்ள இவர், தற்போது சூர்யா படத்தின் மூலம் மூன்றாவது தமிழ்ப் படத்தில் நடிக்கிறார். இதனிடையே இந்தி மற்றும் தெலுங்கில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சூர்யாவிற்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே

Published on 18/05/2024 | Edited on 18/05/2024
pooja hegde to pair with suriya in karthick subburaj movie

சூர்யா தற்போது தனது 42வது படமான ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  3டி முறையில் சரித்திரப் படமாக 38 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. சமீபத்தில் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் வருகிற ஏப்ரலில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. 

இப்படத்தைத் தொடர்ந்து தனது 43வது படத்திற்காக சுதா கொங்கராவுடன் கூட்டணி வைத்தார். இப்படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மா உள்ளிட்ட பிரபலங்களும் கமிட்டாகினர். கடந்த அக்டோபர் மாதம் வெளியான அறிவிப்பு வீடியோவில், படத்தின் தலைப்பு மறைக்கப்பட்டு 'புறநானூறு' என்ற டேக் லைன் மட்டும் இடம் பெற்றிருந்தது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ள நிலையில் அவருக்கு 100வது படமாக அமைந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் உள்ள கல்லூரியில் தொடங்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இப்படத்திற்கு நேரம் அதிகம் தேவைப்படுவதாகக் கூறி படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

இதற்கிடையில் திடிரென்று கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. மேலும் சூர்யாவின் 44ஆவது படமாக இப்படம் உருவாகும் என்றும் சூர்யாவின் 2டி நிறுவனமும் கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இப்படத்தில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் நடிக்கவுள்ளதாகவும் ஜூன் இடையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. 

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளதாக அவரது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு அறிவித்தது. இந்த நிலையில் இப்படத்தின் ஹூரோயின் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பூஜா ஹெக்டே இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பூஜா ஹெக்டே கடைசியாக தமிழில் விஜய்யின் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இதனிடையே இந்தி மற்றும் தெலுங்கில் நடித்து வந்தார்.