
மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸில் மிகவும் பிரபலமான கதாபாத்திரங்களில் ஒன்று தோர். இந்த கதாபாத்திரத்தில் நடித்த கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகமாகினார்கள். குறிப்பாக இந்தியாவில் பெரும் ரசிக பட்டாளாமே உள்ளது. அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் முடிவடைந்த பிறகு மார்வெல் தயாரிப்பு நிறுவனம் அடுத்த மார்வெல் படங்களை இயக்க திட்டமிட்டுள்ளாது.
இதில் அடுத்த வருடம் 'தோர்' படத்தின் நான்காவது பாகமான 'தோர்: லவ் அண்ட் தண்டர்' திரைப்படம் வெளியாகவுள்ளது. 'தோர் ரக்னராக்' படத்தின் இயக்குனர் டைகா வைடிடி இந்த படத்தை இயக்குகிறார். கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் மீண்டும் தோர் கதாபாத்திரத்திலும், டெஸ்ஸா தாம்ஸன் வால்கைரீ கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளனர். தோர் காதலியாக முதல் இரண்டு தோர் படங்களில் தோன்றிய நடாலி போர்ட்மேனும் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்துடன் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் தோர் கதாபாத்திரத்திலிருந்து விலக திட்டமிட்டுள்ளார் என்று தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து அவரது ரசிகர்கள் பலரும் அதிர்ச்சிக்குள்ளாகி சமூகவலைதளத்தில் அவரிடம் கேள்வியை எழுப்பினார்கள்.
இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், “தோர் கதாபாத்திரத்துக்கு வெறும் 1500 வயது தான் ஆகிறது. நிச்சயமாக இந்த படத்தோடு நான் இந்த கதாபாத்திரத்தை விட்டு விலகப் போவதில்லை. குறைந்த பட்சம் அப்படி நடக்காது என்றும் நம்புகிறேன்.
இப்படத்தின் கதையை படித்தவுடன் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். உறுதியாக இப்படத்தில் நிறைய காதலும், மின்னல்களும் இருக்கும். 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' படத்துக்கு பிறகும் நான் மார்வெல் உலகத்தில் இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி.” என்று தெரிவித்துள்ளார்.