Skip to main content

7 ஆண்டுகள் படுத்த படுக்கை... 62 வயதில் நடனத்திற்கான தேசிய விருது... சிவசங்கர் மாஸ்டரின் அறியாத பக்கம்!

Published on 29/11/2021 | Edited on 29/11/2021

 

Sivasankar

 

நடன இயக்குநராகவும் நடிகராகவும் அறியப்பட்ட சிவசங்கர் மாஸ்டர், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று (28.11.2021) காலமானார். அவரது மறைவிற்கு தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழி திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். யார் இந்த சிவசங்கர் மாஸ்டர்? இவர் திரைத்துறைக்குள் வந்தது எப்படி?

 

மொத்த பழ வியாபாரம் செய்துவந்த கல்யாணம் சுந்தரம் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர் சிவசங்கர் மாஸ்டர். அவருக்கு ஒன்றரை வயதாக இருக்கும்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் முதுகு தண்டு உடைய, அதற்கான சிகிச்சை அடுத்த 7 ஆண்டுகள் தொடர்ந்தது. அந்த 7 ஆண்டுகளும் படுத்த படுக்கையாக இருந்த சிவசங்கர் மாஸ்டர், தன்னுடைய எட்டாவது வயதிற்கு பிறகே எழுந்து நடந்துள்ளார். சிவசங்கர் மாஸ்டரின் அப்பா கர்நாடக சங்கீதம் மீது ஆர்வம் கொண்டவர் என்பதால் வீட்டில் கர்நாடக சங்கீதம் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கும். அதன் மூலம், சிவசங்கர் மாஸ்டருக்கும் கர்நாடக சங்கீதம் மீது ஆர்வம் ஏற்பட, அடுத்த பத்து ஆண்டுகள் முறைப்படி சங்கீதம் கற்றுக்கொள்கிறார். பின், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்த சிவசங்கர் மாஸ்டருக்கு, அங்கு நடனமாடுபவர்களைப் பார்த்து நடனத்தின் மீதும் ஆர்வம் ஏற்படுகிறது. நடனம் கற்க விரும்புவதாக வீட்டில் சொன்னபோது குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நடனம், சினிமா மோகத்தில் மகன் உறுதியாக இருப்பதைக் கண்டு சிவசங்கர் மாஸ்டரின் தந்தை, மகனுக்கு ஜாதகம் பார்க்கலாம் என நினைக்கிறார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு வழக்கமாக ஜாதகம் பார்த்துக் கூறும் ஜோதிடர் பி.டி. சுந்தரம் இவர்கள் குடும்பத்திற்கு மிக நெருக்கம் என்பதால் அவரை அழைத்து சிவசங்கர் மாஸ்டரின் ஜாதகத்தை அவர் தந்தை கொடுத்துள்ளார். அதைப் பார்த்துவிட்டு, “சினிமாதான் இவனுக்கு எதிர்காலம்... வேற எதுலயும் சேர்த்துவிட்டு அவன் வாழ்க்கையைப் பாழாக்கிறாதீங்க” என பி.டி. சுந்தரம் கூறியுள்ளார். அதன் பிறகே, சினிமாவிற்கு செல்ல அவருடைய குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

 

நடன இயக்குநராக தன்னுடைய திரை வாழ்க்கையைத் தொடங்கிய சிவசங்கர் மாஸ்டர், ‘மண் வாசனை’, ‘பூவே உனக்காக’, ‘சூரியவம்சம்’, ‘வெற்றிகொடிகட்டு’, ‘வரலாறு’, ‘மஹதீரா’, ‘பாகுபலி’ உட்பட பல படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். இதில், கடந்த 2009ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘மஹதீரா’ படத்தில் இடம்பெற்ற ‘தீரா தீரா..’ பாடலுக்குச் சிறப்பாக நடனம் அமைத்ததற்காக தேசிய விருதும் வென்றார். மேலும், தமிழ்நாடு அரசின் மாநில விருதை ‘பூவே உனக்காக’, ‘விஸ்வ துளசி’, ‘வரலாறு’, ‘உளியின் ஓசை’ ஆகிய படங்களுக்காக வென்றுள்ளார். சிம்பு நடிப்பில் உருவான ‘அலை’ படத்தில் நடன இயக்குநராக சிறு வேடத்தில் நடித்திருந்த சிவசங்கர் மாஸ்டர், அதன் பிறகு நடிப்பிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘பரதேசி’, ‘அரண்மனை’ உட்பட பல படங்களில் சிறு வேடத்தில் நடித்துள்ளார். அதேபோல தமிழ் மற்றும் தெலுங்கில் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

 

இந்தச் சூழலில், தன்னுடைய மனைவி மற்றும் இரு மகன்களுடன் ஹைதராபாத்தில் வசித்துவந்த சிவசங்கர் மாஸ்டருக்கு, சமீபத்தில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவருக்கு மட்டுமின்றி அவரது மனைவி மற்றும் ஒரு மகனுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. சிவசங்கர் மாஸ்டரின் நுரையீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவரது சிகிச்சைக்கு நிதியுதவி தேவைப்படுவதாகவும் தகவல்கள் வெளியானதையடுத்து, தனுஷ், சோனு சூட் உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த பலரும் அவரது சிகிச்சைக்கு உதவியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் 17 விருதுகளுக்குத் தேர்வாகியுள்ளது” - அமைச்சர் சிவசங்கர்

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
Minister Sivasankar says Tamil Nadu Government Transport Corporations have been shortlisted for 17 awards

அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு (ASRTU) மூலமாக வழங்கப்படும் 2022-23 ஆண்டிற்கான தேசிய பொது பேருந்து போக்குவரத்து சிறப்பு விருதுகளில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் 17 விருதுகளுக்குத் தேர்வாகியுள்ளது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘இந்தியாவில் உள்ள அனைத்து மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் வளங்கள் மற்றும் செயல்திறனை ஆராய்ந்து பொதுவான கட்டமைப்பின் கீழ் கொண்டு வர 1965 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 13 ஆம் நாள் அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு (ASRTU) ஏற்படுத்தப்பட்டது. 

இக்கூட்டமைப்பு மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இக்கூட்டமைப்பில் உறுப்பினர்களாக 70 மாநில போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன. இக்கூட்டமைப்பு ஆண்டுதோறும் அனைத்து மாநில போக்குவரத்துக் கழகங்களை ஊக்குவிக்கும் வண்ணம் அவற்றின் செயல்திறன்களை ஆய்வு செய்து விருதுகள் வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து விருதுகள் பெற்று வருகின்றன.

தற்போது, தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தல்படியும் எனது வழிக்காட்டுதல்படியும் போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளரின் கண்காணிப்பின் கீழ் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்புடன், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சிறந்த முறையில் பணியாற்றியதின் பயனாக, அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு (ASRTU) மூலமாக வழங்கப்படும் 2022-23 ஆண்டிற்கான தேசிய பொது பேருந்து போக்குவரத்து சிறப்பு விருதுகளில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் 17 விருதுகளுக்குத் தேர்வாகியுள்ளது. 

மொத்தமாக வழங்கப்படும் விருதுகளில் 25% விருதுகளை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் பெற்றுள்ளது. முதல் பரிசுக்கான 38 பிரிவுகளில் 9 பிரிவுகளிலும், இரண்டாம் பரிசுக்கான 31 பிரிவுகளில் 8 பிரிவுகளிலும் ஆக மொத்தம் 69-ல் 17 பிரிவுகளில் பரிசு பெறுவதற்கு தேர்வாகியுள்ளது. இது மொத்த விருதுகளில் நான்கில் ஒரு பங்கு ஆகும். இதன்படி, பேருந்துகளில் எரிபொருள் திறனுக்காக (புறநகர் 1000 பேருந்துகளுக்குள்) (Fuel Efficiency Award) முதல் இடத்திற்காகவும், சாலை பாதுகாப்பிற்காகவும் (புறநகர் 1000 பேருந்திற்குள்) (Road Safety Award). உருளிப்பட்டை செயல்திறனுக்காகவும் (கிராமப்புற பிரிவு) (Tyre Performance Award-Rural), பேருந்துகளில் உருளிப்பட்டை செயல்திறனுக்காகவும் (நகர்ப்புற பிரிவு) (Tyre Performance Award-Urban), வாகன பயன்பாட்டிற்காகவும் (கிராமப்புற பிரிவு) (Vehicle Utilization Award-Rural), பயன்பாட்டிற்காகவும் (நகர்ப்புற பிரிவு) (Urban Vehicle Utilization Award) இரண்டாம் இடத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட் 6 விருதுகள் பெற்றிட தேர்வாகியுள்ளது.

பேருந்துகளில் எரிபொருள் திறனுக்காகவும் (நகர்புறம் 1000 பேருந்துகளுக்கு மேல்) (Fuel Efficiency Award), உருளிப்பட்டை செயல்திறனுக்காகவும் (கிராமப்புற பிரிவு) (Tyre Performance Award-Rural), பேருந்துகளில் உருளிப்பட்டை செயல்திறனுக்காகவும் (நகர்ப்புற பிரிவு) (Tyre Performance Award- Urban), வாகன பயன்பாட்டிற்காகவும் (நகர்ப்புற பிரிவு) )Vehicle Utilization Award-Urban) முதல் இடத்திற்கும், ASRTU தள்ளுபடி விலையில் அதிக பொருட்கள் கொள்முதல் செய்ததற்காக (ASRTU Rebate Award) இரண்டாம் இடத்திற்கும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட் 5 விருதுகள் பெற்றிட தேர்வாகியுள்ளது.

வாகன பயன்பாட்டிற்காகவும் (கிராமப்புற பிரிவு) (Vehicle Utilization Award- Rural) பணியாளர் செயல் திறனுக்காகவும் (நகர்ப்புற பிரிவு) (Employee Productivity Award-Rural) முதல் இடத்திற்கும், பேருந்துகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைக்காக (நகர்ப்புற பிரிவு) (Digital Transaction Award-Rural) இரண்டாவது இடத்திற்கும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (தமிழ்நாடு) லிமிடெட் 3 விருதுகள் பெற்றிட தேர்வாகியுள்ளது.

சாலை பாதுகாப்பிற்காக (நகர்ப்புறம் 1000-க்கும் குறைவான பேருந்துகள்) (Road Safety Award) முதல் இடத்திற்கும், சாலை பாதுகாப்பிற்காக (புறநகர் -1001 4000 பேருந்துகள்) (Road Safety Award) இரண்டாவது இடத்திற்கும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (சேலம்) லிமிடெட் 2 விருதுகள் பெற்றிட தேர்வாகியுள்ளது. ASRTU தள்ளுபடி விலையில் அதிக பொருட்கள் கொள்முதல் செய்ததற்காக (ASRTU Rebate Award) முதல் இடத்திற்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிமிடெட் ஒரு விருது பெற்றிட தேர்வாகியுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

'எடப்பாடி பழனிசாமி வந்தால் நாங்கள் தயார்' - அமைச்சர் சிவசங்கர் பேட்டி

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
 Minister Sivashankar interview

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு மாற்றாக கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் கட்டப்பட்டு செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது. புதிய பேருந்து நிலையத்திற்கு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் தொடர்ந்து கிளம்பி வரும் நிலையில், பேருந்து நிலையத்தை முழுமையாக கட்டி முடிக்காமல் திமுக அரசு திறந்து வைத்திருப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு வைத்திருந்தார்.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், ''எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி கொடுத்தபோது, திமுக ஆட்சி வந்த பிறகு புதிய பேருந்துகள் வாங்கப்படவில்லை என்றும், பழைய பேருந்துகளைத் தான் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். அவருக்கு நான் அன்போடு தெரிவித்துக் கொள்வது, புதிய பேருந்துகள் வாங்கப்பட்ட காரணத்தினால் தான் ஜனவரி 20 ஆம் தேதி தமிழக முதல்வர் 100 புதிய பேருந்துகளை இயக்கி வைத்தார்.

அவர் 100 புதிய பேருந்துகளை துவக்கி வைத்ததற்கு பிறகு 91 பேருந்துகள் ஓட்டத்திற்கு வந்திருக்கிறது. எனவே 191 பேருந்துகள் ஓட்டத்திற்கு வந்திருக்கிறது. கிளம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் குறித்து மீண்டும் மீண்டும்  எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு சொல்லிக் கொண்டிருக்கிறார். இன்று ஆசியாவின் மிகச் சிறந்த பேருந்து முனையமாக அந்த பேருந்து நிலையம் அமைந்திருக்கிறது. பல்வேறு பத்திரிகைகள் பாராட்டிக் கொண்டிருக்கிறது என்பதை அவரும் அறிவார். அவருக்கு அதில் சந்தேகம் இருந்தால், அவர் வருவதற்கு நேரம் இருந்தால் நானும் கிளம்பாக்கம் பேருந்து நிலைய துறையான சிஎம்டிஏ துறைக்கான அமைச்சராக இருக்கும் சேகர்பாபுவும் அவரை நேராக அழைத்துக் கொண்டுபோய் பேருந்து நிலையத்தில் என்னென்ன வசதிகள் இருக்கிறது என்பதை காண்பிக்க தயாராக இருக்கிறோம்'' என்றார்.