Chola Chola Lyric Video out now

Advertisment

இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது 'பொன்னியின் செல்வன்'. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'லைகா' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடலான'பொன்னி நதி பாக்கணுமே'பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அடுத்த பாடலான ’சோழா சோழா’ பாடலைபடக்குழு வெளியிட்டுள்ளது. பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் வரிகளில் சத்யபிரகாஷ், வி. எம் மகாலிங்கம் மற்றும்நகுல் அபியங்கர்ஆகியோர் இணைந்துபாடியுள்ள இப்பாடல் பலரின் கவனத்தை பெற்று வருகிறது.