Skip to main content

ஸ்டைலான லுக்கில் சிரஞ்சீவி ; வெளியானது மோகன் ராஜா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

 

 Chiranjeevi, salmaan khan & Mohan Raja ; First look of released of godfather movie

 

மலையாளத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் 'லூசிஃபர்'. நடிகர் ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளியான இப்படம், பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது. அந்த வகையில் இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கை மோகன் ராஜா இயக்கி வருகிறார். கதாநாயனாக சிரஞ்சீவி நடிக்க கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் சல்மான் கான் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' மற்றும் 'என்.வி.ஆர் ஃபிலிம்ஸ்' இணைந்து தயாரிக்கும்  இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். 'காட்ஃபாதர்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் 'காட்ஃபாதர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் ஸ்டைலான லுக்கில் சிரஞ்சீவி அமர்ந்திருக்கிறார். இதனை அதிகாரப்பூர்வமாக தங்களது ட்விட்டர் பக்கத்தில் மோகன்ராஜா உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் பகிர்ந்துள்ளனர். அதோடு ஒரு புது வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ ரசிகர்களின் வரவேற்பை பெற்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.