Chief Minister consoled Vadivelu for his brother passed away

Advertisment

நடிகர் வடிவேலுவின் சகோதரர் ஜெகதீஸ்வரன் காலமானார். இவர் சிம்பு நடிப்பில் வெளியான 'காதல் அழிவதில்லை' படத்தில் நடித்திருந்தார். மதுரையில் ஜவுளி வியாபாரம் நடத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில், உடல் நிலை சரியில்லாத காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் மதுரை வீரகனூரில் அவரது இல்லத்தில் 52வது வயதில் உடல் நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். இவரது மறைவு வடிவேலு குடும்பத்தினர் உட்பட பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் முதல்வர் மு.க ஸ்டாலின், "திரைக்கலைஞர் வடிவேலுவின் தம்பியான ஜெகதீஸ்வரன் (52), உடல்நலக் குறைவின் காரணமாக உயிரிழந்தார் என்று அறிந்து வருந்துகிறேன். உடன்பிறந்த உற்ற துணையான தன் தம்பியை இழந்து வாடும் வடிவேலுவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் இந்நேரத்தில் தெரிவித்து கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.