Skip to main content

நாசரின் தந்தை மறைவிற்கு முதல்வர் இரங்கல்

Published on 10/10/2023 | Edited on 10/10/2023

 

Chief Minister condoles of Nasser father passed away

 

தமிழ் சினிமாவில் எல்லா கதாபாத்திரத்திற்கும் ஏற்றார்போல தன் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்துபவர்களில் முக்கியமானவர் நாசர். இப்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 38 ஆண்டுகள் திரைத்துறையில் பயணித்து வரும் நாசர் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். 

 

இந்த நிலையில், நடிகர் சங்கத் தலைவர் நாசரின் தந்தை மாபுப் பாஷா இன்று காலமாகியுள்ளார். அவருக்கு வயது 95. செங்கல்பட்டு தட்டான்மலை தெருவில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக் குறைவால் மாபுப் பாஷா மறைந்துள்ளார். இவரது மறைவு திரையுலகினரை சோகத்தில்  ஆழ்த்தியுள்ளது. திரையுலகினர் உள்ளிட்ட பலரும் நாசருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

 

அந்த வகையில் நாசர் தந்தையின் மறைவிற்கு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மூத்த நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவருமான நாசரின் தந்தை பாஷா, வயது மூப்பு காரணமாக மறைவெய்தினார் என்றறிந்து வருந்துகிறேன். தந்தையின் மறைவால் வாடும் நாசர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பூஜையுடன் பணிகளைத் தொடங்கிய சங்க நிர்வாகிகள்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nadigar sangam building works start again with pooja

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் நிதிப் பற்றாக்குறை காரணமாக நிறைவு பெறாமல் இருந்தது. இந்த பணி நிறைவு பெற வங்கியில் ரூ.40 கோடி கடன் வாங்க ஒப்புதல் வாங்கியிருப்பதாக சங்க பொருளாளர் கார்த்தி 67வது சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து நடிகர் சங்க புதிய கட்டடம் முழுமையாக கட்டி முடிக்க அமைச்சர் உதயநிதி நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார். பின்பு சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினர் கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கினார். தொடர்ந்து விஜய் ரூ.1 கோடி நன்கொடை அளித்ததாக நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது. 

nadigar sangam building works start again with pooja

இந்த நிலையில் இன்று சங்கத்தின் புதிய கட்டட பணிகள் மீண்டும் தொடங்கியது. பூஜை நடத்தி பணிகளை தொடங்கினார்கள் சங்க நிர்வாகிகள். இந்த பூஜை விழாவில், சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்ட சில முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

Next Story

ஷங்கர் வீட்டு நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
shankar daughter aishwarya marriage cm mk stalin wished

முன்னணி இயக்குநராக வலம் வரும் ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி என 2 மகள்கள் உள்ளனர். இளைய மகள் அதிதி ஷங்கர், தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மூத்த மகள் ஐஸ்வர்யா, பணியாற்றி வருவதாக கூறப்படும் நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு தொழிலதிபர் மற்றும் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்தை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது. முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட சில முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து ரோஹித் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ரோகித்தை ஐஸ்வர்யா விவாகரத்து செய்தார். பின்பு ஷங்கர் வீட்டிலே வசித்து வந்த அவர், கடந்த பிப்ரவரி மாதம் தருண் கார்த்திகேயன் என்பவரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து திருமண விழாவிற்கு முதல்வர் ஸ்டாலின், மற்றும் திரைப்பிரபலங்கள் பலருக்கும் ஷங்கர் அழைப்பிதழ் வழங்கினார்.  

இந்த நிலையில் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.