![chennai High Court quashed jaibhim case against Surya](http://image.nakkheeran.in/cdn/farfuture/JKyTk2sL58yUKht8MdCNx3ewYMjfIkohEOJ9lSbA0Z0/1660211942/sites/default/files/inline-images/1539.jpg)
இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஜெய் பீம்’ படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், தமிழ்நாடு முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டினார்கள். இருப்பினும் ஜெய் பீம் படம் குறித்து சர்ச்சைகளும் புகார்களும் எழுந்த வண்ணம் இருந்தன.
![ad](http://image.nakkheeran.in/cdn/farfuture/Psr5cXpEchqX0e5HSfJ85-D5XjvQ1vI89ApFE_0ABj8/1660212089/sites/default/files/inline-images/500-X-300-Viruman_10.jpg)
அந்த வகையில் ஜெய் பீம் படத்தில் குறிப்பிட்ட சமூகத்தை தவறாகச் சித்தரித்துள்ளதாக கூறி நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் த. செ ஞானவேல் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதனிடையே சூர்யா மற்றும் படத்தின் இயக்குநர் த.செ. ஞானவேல் இருவரும், "குறிப்பிட்ட சமூகத்தினரை காயப்படுத்தும் எண்ணத்தில் படம் எடுக்கவில்லை" என விளக்கமளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.