/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/469_5.jpg)
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன். ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இப்படம் நாளை (30.09.2022) பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகிறது. இதனிடையே லைகா நிறுவனம் பொன்னியின் செல்வன் படத்தை அரசு மற்றும் தனியார் இணையதள சேவை நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக 2,405 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பெரும் பொருட்செலவில் படத்தை வெளியிடவுள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்றும் திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் வாதிட்டார். இதனையடுத்து இப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்தும் இதுபோன்று வெளியிடுவதை இணையதள சேவைகள் தடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)