Skip to main content

‘சந்திரமுகி 2’ படத்தின் ரிலீஸ் அப்டேட்

Published on 29/06/2023 | Edited on 29/06/2023

 

chandramukhi 2 release update

 

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வருகிறது 'சந்திரமுகி 2' படம். இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத், வடிவேலு மற்றும் ராதிகா நடிக்கிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் வருகிற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான புதிய போஸ்டரையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது. 

 

முதல் பாகம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கன்வார் யாத்திரை உத்தரவு குறித்த சோனு சூட் பதிலுக்கு கங்கனா ரனாவத் பதிலடி!

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
Kangana Ranaut's response to Sonu suit on Kanwar Yatra order!

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் ஒவ்வொரு ஆண்டின் ஜூலையில் இருந்து ஆகஸ்ட் வரையிலான கன்வார் யாத்திரையை இந்துக்கள் மேற்கொண்டு வருகிறார்கள். உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வார் உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்று கங்கை நீரை எடுத்து வந்து தங்கள் ஊர்களில் உள்ள சிவன் கோவில்களில் அபிஷேகம் நடத்துவார்கள். அதன்படி, கன்வார் யாத்திரை வரும் ஜூலை 22ஆம் தேதி தொடங்க உள்ளது. 

இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தில், கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடத்தில் அருகில் உள்ள அனைத்து உணவகங்களிலும் உரிமையாளர்களின் பெயர்கள் கொண்ட பலகைகள் வைக்க வேண்டும் என்று ஹரித்வார் காவல்துறை நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த யாத்திரையை மேற்கொள்பவர்களின் புனிதத்தன்மையைப் பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தார். 

இந்த உத்தரவு அரசியல் சாசனத்திற்கு எதிராகவும் முஸ்லீம் உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் சர்ச்சை கிளம்பியது. மேலும் எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட், “ஒவ்வொரு கடையிலும் ஒரே ஒரு பெயர்ப்பலகை தான் இருக்க வேண்டும். அது மனிதநேயம்” என தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில், நடிகர் சோனு சூட்டுக்கு பதிலளிக்கும் வகையில் மண்டி தொகுதி எம்.பி.யும், நடிகையுமான கங்கனா ரனாவத் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஒப்புக்கொள்கிறேன், ஹலாலுக்கு பதிலாக ‘மனிதநேயம்’ என்று மாற்றப்பட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். 

Next Story

“டிரம்ப் உயிர்தப்பியதால் இடதுசாரிகள் அவநம்பிக்கை அடைந்துள்ளனர்” - கங்கனா ரனாவத்

Published on 16/07/2024 | Edited on 16/07/2024
Kangana Ranaut said that Left Is Desperate That Trump Has Survived

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், அங்கு தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ளது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனை எதிர்த்து, முன்னாள் அதிபரும், குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.

இந்தநிலையில், அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதனால் காயமடைந்த டிரம்ப் பாதுகாப்பு அதிகாரிகளால் காப்பாற்றப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார். இந்தச் சம்பவத்திற்குக் காரணமான நபரை அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொன்றனர். இது உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் டிரம்ப் உயிர் தப்பியுள்ளதால் இடதுசாரிகள் அவநம்பிக்கை அடைந்துள்ளனர் என நடிகையும், நாடாளுமன்ற எம்.பியுமான கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “டிரம்ப் பேசிக்கொண்டிருக்கும் போதே சுடப்பட்டார். ஆனால் கொலை முயற்சியில் இருந்து டிரம்ப் தப்பியதால் இடதுசாரிகள் அவநம்பிக்கை அடைந்துள்ளனர். அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.

கிட்டத்தட்ட 80 வயதாகும் டிரம்ப் தன் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தும் ‘அமெரிக்கா வாழ்க’ என்று கோஷமிடுகிறார். எப்போது வலதுசாரிகள் சண்டையை தொடங்குவதில்லை. முடிவுகட்டவே நினைக்கின்றனர். டிரம்பின் மார்பில் தோட்டாக்கள் பாய்ந்தது. ஆனால் அவர் மட்டும் புல்லட் புரூப் ஜாக்கெட் அணியாமல் இருந்திருந்தால் டிரம்ப் உயிர்பிழைத்திருக்க மாட்டார்.  இடதுசாரிகள் அடிப்படையில் அமைதி, அன்பை நம்புகிறார்கள்; ஆனால் டிரம்பை கொலை செய்ய முயல்கின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.