Published on 27/09/2023 | Edited on 27/09/2023
![Captain Miller Overseas release by lyca](http://image.nakkheeran.in/cdn/farfuture/FzVBuNRhyAnqowMVFTkqaD2zja1xzdmeX5h0YONN-Z4/1695807644/sites/default/files/inline-images/20_85.jpg)
தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். 'சத்ய ஜோதி ஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கோக்கன், மூர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பில் பல சிக்கல்களைப் படக்குழு எதிர்கொண்டு படப்பிடிப்பை நடத்தி வந்தது. கடந்த மாதம் முழு படப்பிடிப்பும் நிறைவுற்றது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. டிசம்பர் 15ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் வெளிநாட்டு திரையரங்க உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.