captain miller first single released

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'கேப்டன் மில்லர்'. சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கோக்கன், மூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

Advertisment

ad

இப்படத்தின் படப்பிடிப்பில் பல சிக்கல்களைப் படக்குழு எதிர்கொண்டு படப்பிடிப்பை நடத்தி வந்தது. கடந்த மாதம் முழு படப்பிடிப்பும் நிறைவுற்றது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் டிசம்பர் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக முன்பு படக்குழு தெரிவித்த நிலையில், தற்போது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.

Advertisment

இதையடுத்து முதல் பாடல் குறித்த அப்டேட் அவ்வப்போது வெளியாகி வந்த நிலையில் தற்போது லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. ‘கில்லர் கில்லர்’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த பாடலை தனுஷ் பாடியுள்ளார். பாடலை பார்க்கையில் வில்லன்களுக்கு தனுஷ்எச்சரிக்கை செய்யும் வகையில் உள்ளது. கபேர் வாசுகி வரிகளில் வரும், ‘தனியா வந்தா தலை மட்டும் உருளும்... நீ படையா வந்தால் சவமலை குவியும்... நீ நரியா பதுங்க ரோமம் கிழியும்... நீ எருவா பாய கொம்பும் முறியும்...’ எனும் வரிகள் கவனத்தை ஈர்த்துள்ளது.