AjithKumar

எச். வினோத் - அஜித் - போனி கபூர் கூட்டணியில் ‘வலிமை’ திரைப்படம் உருவாகிவருகிறது. முன்னதாக, இக்கூட்டணியில் உருவான ‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, இக்கூட்டணி ‘வலிமை’ படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளது. மேலும், மற்றொரு படத்திற்காக மூன்றாவது முறையாகவும் இக்கூட்டணி இணையவுள்ளது.

Advertisment

தற்போது ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், தனக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில் நடிகர் அஜித் வட இந்தியாவில் பைக் பயணம் செய்துவருகிறார். சமீபத்தில் இந்தியா - பாகிஸ்தான் எல்லையான வாகா எல்லைக்குச் சென்ற அஜித், அங்கு தேசியக்கொடி ஏந்தி நின்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில், நடிகர் அஜித்தின் பைக் பயணம் தொடர்பான சில புகைப்படங்களை தயாரிப்பாளர் போனி கபூர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தன்னுடைய விருப்பப்படி வாழ்வதிலிருந்தும், தன்னுடைய ஒவ்வொரு கனவையும் நனவாக்குவதிலிருந்தும் அஜித்தை எதுவும் தடுக்க முடியாது. அஜித் உலகம் முழுவதும் விரும்பப்படுகிறார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.