Skip to main content

"தயவு செய்து பொய்யான தகவலை பரப்பாதீங்க" - ஜான்வி கபூர் குறித்து போனி கபூர் விளக்கம்

 

boney kapoor tweet about janhvi kapoor news

 

நடிகை ஸ்ரீதேவி, தயாரிப்பாளர் போனி கபூரின் மகளான ஜான்வி கபூர், கடந்த 2018 இல் இந்தியில் வெளியான 'தடக்' படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். தொடர்ந்து இந்தியில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களில் 'குஞ்சன் சக்ஸேனா' மட்டும் தான் நல்ல வரவேற்பைப் பெற்றது.

 

கடைசியாக ஜான்வி நடிப்பில் வெளியான இரண்டு படங்களும் தென்னிந்தியப் படங்களின் இந்தி ரீமேக். 'கோலமாவு கோகிலா' படம் 'குட் லக் ஜெரி' என்றும், 'ஹெலன்' என்ற மலையாளப் படம் 'மிலி' என்ற தலைப்பிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. இதையடுத்து தென்னிந்திய திரையுலகில் அறிமுகமாகவுள்ளதாக ஒரு பேட்டியில் அவர் கூறியிருந்தார்.

 

இதனைத் தொடர்ந்து ஜான்வி கபூர் கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியானது. லிங்குசாமி ஆர்யாவை வைத்து 'பையா 2' படத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அதில் கதாநாயகியாக நடிக்க ஜான்வி கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் இந்த தகவல் குறித்து ஜான்வி கபூரின் தந்தை போனி கபூர் வெளியிட்டுள்ள பதிவில், "ஜான்வி கபூர், தற்போது வரை எந்த ஒரு தமிழ் படத்திலும் கமிட்டாகவில்லை. தயவு செய்து பொய்யான தகவலை பரப்பாதீங்க." எனக் குறிப்பிட்டுள்ளார்.