Skip to main content

“ப்ளூ ஸ்டார் படத்திற்கு இது தேவைப்படவில்லை” - ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Blue Star Cinematographer Tamil Azhagan Interview | 

திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ப்ளூ ஸ்டார்’ படத்தின் ஒளிப்பதிவாளர் தமிழ் அழகனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். சினிமாவில் தன்னுடைய பயணம் குறித்தும் ப்ளூ ஸ்டார் படம் குறித்தும் பல்வேறு கருத்துக்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் குறிப்பாக ஒளிப்பதிவை பாராட்டி நிறைய பேர் போன் பண்ணி வாழ்த்தினார்கள். இதெல்லாம் ரொம்ப நுணுக்கமாக செய்த விசயங்கள் என்று படத்தில் நான் நினைத்த பல விசயங்களை கவனித்து நிறைய பேர் சொன்னது ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. கதைக்களம் அரக்கோணம் என்பதால் அங்கே என்ன இருக்கிறதோ, கிடைக்கிறதோ அதை வைத்துத்தான் படத்தை எடுத்தாக வேண்டும். அதுதான் நேட்டிவிட்டியோடு இருக்கும் என்பதால் அரக்கோணத்திற்கு அதிக வெயில், ரயில்வே ஸ்டேசன் இதுதான் ஸ்பெசல். அதையே படம் முழுவதும் பயன்படுத்தினோம்.  

எங்க ஃப்ரேம் வைத்தாலும் இது அரக்கோணம் என்று தெரியவேண்டும். அதில் ரொம்ப கவனமாகவே இருந்தோம். அதற்கு வெயில் ஒரு முக்கிய பங்களிப்பாக இருந்தது. படத்தில் நடித்தவர்கள் கருப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பத்தில் மேக்கப் போட்டோம். பிறகு வெயிலுக்கு அவர்களெல்லாம் மேட்ச் ஆகிட்டாங்க, பில்டப் கொடுக்க, சில எமோஷ்னல்ஸ் கன்வே பண்ண ஸ்லோமோசன் சீன்கள் தேவைப்படும், அதை எடுத்து வைத்துக்கொள்வோம், தேவைப்பட்டால் பயன்படுத்துவோம், இந்த படத்தில் அது தேவைப்படவே இல்லை. 

கதையை முதலில் படித்தபோது கிரிக்கெட்டை மையப்படுத்திய கதையில் காதல் சார்ந்த போர்ஷன் ரொம்ப சூப்பரா இருந்தது. அதையே ஒரு தனிப்படமாக எடுக்கலாம் அந்த அளவிற்கு அழகான காதல் கதையும் உள்ளது. படத்திற்குள் சேராத ரஞ்சித் - ஆனந்தி ஜோடி நிஜ வாழ்க்கையில் அசோக்செல்வன் - கீர்த்தி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க, அது ரொம்ப ஆச்சரியமாகவும் இருந்தது. இயக்குநரும் இந்த படத்தின் தயாரிப்பாளருமான ரஞ்சித் அண்ணா உதவி இயக்குநராக சென்னை:28 படத்துல வேலை பார்க்கும் போது அவரை பைக்ல பிக் அப் டிராப் பண்றது ப்ளூ ஸ்டார் இயக்குநர் ஜெய்குமார். இன்று ரஞ்சித் அண்ணா தயாரிக்க, ஜெய்குமார் படம் பண்ணது ரொம்ப சூப்பரான அழகான விசயமாக நான் பார்க்கிறேன்.

சார்ந்த செய்திகள்

Next Story

சாம் ஹாப்பி அண்ணாச்சி; மகிழ்ச்சியில் திளைக்கும் பிரித்விராஜன்

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
 prithviactor tweet - blue star

'நீலம் புரொடக்‌ஷன்ஸ்' சார்பாக பா. ரஞ்சித் தயாரிப்பில் ஜெய்குமார் இயக்கத்தில் ஷாந்தனு, அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம்  'ப்ளூ ஸ்டார்'. கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவான இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். கடந்த 25 ஆம் தேதி வெளியான இப்படம் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது. இந்த வெற்றியைப் படக்குழு கேக் வெட்டிக் கொண்டாடியது.

இப்படத்தில் நடித்த இயக்குநர், நடிகர் பாண்டியராஜனின் மகனும், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகனுமான பிரித்விராஜனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். அப்போது அவர் நம்மிடையே பல்வேறு சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.  இந்நிலையில் தன்னுடைய படத்தை நடிகர் விஜய் சேதுபதி பார்த்து, பாரட்டியதை நெகிழ்ச்சியோடு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதாவது “இந்த தம்பிக்காக நேரம் ஒதுக்கி என்னுடன் சேர்ந்து “ப்ளூ ஸ்டார்” பார்த்ததற்கு நன்றி அண்ணா. படம் உங்களுக்கு பிடித்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. என் வீடு வந்து என்னையும், எங்களுடைய படக்குழுவையும் பாராட்டியதற்கு நன்றி. “சாம் ஹாப்பி அண்ணாச்சி!!” என்றிருக்கிறார். இதில் சாம் என்பது ப்ளூஸ்டார் படத்தில் வரும் கதாபாத்திரம்; அத்தோடு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் குமுதா ஹாப்பி அண்ணாச்சி என்பது விஜய்சேதுபதி பேசி பின்னர் பிரபலமான வசனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

“நல்ல இயக்குநர்கள் கிடைத்தது எனக்கு லக்கி தான்” - நிவேதிதா சதீஸ்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Nivedhithaa Sathish Interview

சில்லுக்கருப்பட்டி, செத்தும் ஆயிரம் பொன் போன்ற படங்களில் நடித்த நிவேதிதா சதீஸ், சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்து பல கேள்விகளை முன் வைத்தோம். அவர் நம்மோடு பல்வேறு சுவாரசியமான தகவல்களையும் தன்னுடைய திரையுலக அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

சில்லுக்கருப்படி படம் தான் திரையரங்கில் வெளியான என்னுடைய முதல் படம். இன்றும் சோசியல் மீடியாவில் யாராவது ஒரு க்ளிப்பிங்க்ஸ் எடுத்து ஷார்ட்ஸா ஷேர் பண்ணிக்கிட்டு இருப்பாங்க. அது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும்.  அதற்கடுத்தபடியாக வெளியான செத்தும் ஆயிரம் பொன்னும் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது, நல்ல இயக்குநர்கள் எனக்கு அமைந்ததை நான் எனக்கு கிடைத்த லக்கியாக பார்க்கிறேன். 

ஆக்ஷன் படங்களில் நடிக்கணும், பீரியட்ஸ் படங்களில் நடிக்கணும், தனுஷ் கூட நடிக்கணும் இப்படி தனித்தனியாக ஆசை இருந்தது. இதெல்லாமே சேர்த்து ஒரே படமாக கேப்டன் மில்லர் அமைந்துவிட்டது. கேப்டன் மில்லர் படத்தில் பெரிய ஜாம்பவான்கள் மத்தியில் நான் மட்டும் சின்ன வயது பிள்ளையாக இருப்பேன். எல்லோரும் என்னை கடைக்குட்டி என்றுதான் கூப்டுவாங்க. 

இந்த படத்திற்காக என்னை மாதிரியான ஒரு பெண் வேண்டும் என்று தேடிக் கொண்டிருப்பதாக சொன்னார்கள். எதுக்கு என்னை மாதிரியான பொண்ணு நானே நடிக்க தயாராத்தானே இருக்கேன்னு நினைச்சேன். அப்படியாக எனக்கு வாய்ப்பு வந்தது. படத்தில் என் கேரக்டருக்காக நிறைய ஹாலிவுட் படங்களை பார்க்கச் சொன்னாரு, கொஞ்சம் கொஞ்சமாக அந்த கேரக்டரை உள்வாங்கி சிறப்பாக நடித்து முடித்ததாக நம்புகிறேன்.