Bharathiraja was re-admitted to the hospital

Advertisment

இயக்குநர் பாரதிராஜா சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு மேல் சிகிச்சைக்காக அமைந்தகரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்பு பாரதிராஜா அண்மையில் குணமடைந்து நலமுடன் வீடு திரும்பினார். சென்னை நீலாங்கரை வீட்டில் ஓய்வு எடுத்து வந்த பாரதிராஜாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் நலம் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் பாரதிராஜா மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த அமைந்தகரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.