Skip to main content

இரண்டு மொழிகளில் சசிகுமார் படம் ரீமேக்?

 

ayothi movie remake update

 

சசிகுமார் நடிப்பில் இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் கடந்த 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘அயோத்தி'. பெரிதளவு ப்ரோமோஷன் இல்லாமல் வெளியான இப்படம் ரசிகர்களின் வரவேற்பின் மூலம் பலரது கவனத்தை பெற்றது. 

 

மனிதம் மற்றும் மதநல்லிணக்கத்தை பற்றி பேசியிருந்த இப்படம் திரைப்பட விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. படத்தை பார்த்த ரசிகர்களும் திரைப் பிரபலங்களும் படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டினர். இப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். மேலும் இயக்குநர் மந்திரமூர்த்தி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோருக்கு தங்க செயின் பரிசாக வழங்கினார் சசிகுமார். அண்மையில் இப்படம் பார்த்து வாழ்த்து அறிவிப்பு வெளியிட்ட சீமான், "மனிதம் போற்றும் அயோத்தி. ஒவ்வொருவரும் போற்ற வேண்டிய படம்" என குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பால் தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

 

'அயோத்தியா' என்ற தலைப்பில் இரண்டு மொழிகளிலும் உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. தெலுங்கில் வெங்கடேஷும் இந்தியில் அஜய் தேவ்கனும் நடிக்கவுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.