/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/51_31.jpg)
இந்தியில் பல படங்களில் நடித்து பிரபலமான தனுஸ்ரீ தத்தா தமிழில் விஷாலின் 'தீராத விளையாட்டு பிள்ளை' படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு தான் பாலிவுட் நடிகர் நானா படேகரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் என குற்றம் சாட்டினார். இதனையடுத்து சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தான் மிகவும் துன்புறுத்தப்பட்டு மோசமாகக் குறிவைக்கப்படுவதாகப் பரபரப்பைக் கிளப்பினார். மேலும் தனக்கு ஏதேனும் நடந்தால் அதற்கு நானா படேகர்தான் காரணம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தனுஸ்ரீ தத்தா சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து பேசியுள்ளார். அதில் ஏற்கனவே தனது சமூக வலைதளப்பக்கத்தில் குறிப்பிட்டிருந்ததை குறிப்பிட்டுள்ளார். அந்த பேட்டியில், "'என்னை கொலை செய்ய பல்வேறு வழிகளில் முயற்சிகள் நடந்து வருகின்றன. முதலில் எனது வீட்டின் பணிப்பெண்ணின் மூலம் குடிநீரில் மருந்துகள் மற்றும் ஸ்டெராய்டுகள் கலக்கச் செய்தனர். இது கடுமையாக அனைத்து வகையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தியது. பிறகு நான் உஜ்ஜயினிக்கு தப்பிச் சென்றேன். அப்போது எனது வாகனத்தின் பிரேக் இரண்டு முறை சேதமடைந்து விபத்துக்குள்ளானது" என பேசியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)