Skip to main content

அடுத்த படத்தின் அப்டேட்டை வெளியிட்ட அட்லீ..  

Published on 10/11/2020 | Edited on 10/11/2020

 

atlee

 

தமிழில் நடிகர் கார்த்தி நடிப்பில், கடந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகி வெற்றியடைந்த படம் 'கைதி'. அப்படத்தில் ‘அன்பு’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் அர்ஜுன் தாஸ்.   

 

இதைத் தொடர்ந்து, அர்ஜுன் தாஸ் தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் 'மாஸ்டர்' படத்தில் நடித்துள்ளார். இதற்கிடையே அட்லீ தயாரிப்பில், அறிமுக இயக்குனர் விக்னராஜன் இயக்கும் 'அந்தகாரம்' படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் அர்ஜுன் தாஸ். சூப்பர் நேச்சுரல் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் நவம்பர் 24 ஆம் தேதி, நெட்ஃப்ளிக்ஸில்  வெளியாகவுள்ளது.    

 

'அந்தகாரம்' படத்தின் ட்ரைலர் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் மற்றொரு ட்ரைலர், இன்று மாலை ஆறுமணிக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் அட்லீ அறிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்