/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/305_14.jpg)
அதர்வா நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியான 'குருதி ஆட்டம்' படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனிடையே சாம் ஆண்டன் இயக்கத்தில் ‘ட்ரிக்கர்’ படத்தில் நடித்துள்ளார் அதர்வா. இப்படத்தில் கதாநாயகியாக தன்யா ரவிசந்திரன் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் அருண் பாண்டியன் நடித்துள்ளார். பிரதீக் சக்கரவர்த்தியுடன் இணைந்து ஸ்ருதி நல்லப்பா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் க்ளிம்பஸ் வீடியோ கடந்த ஆண்டு வெளியானது.
இந்நிலையில் ‘ட்ரிக்கர்’ படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பள்ளி குழந்தைகளை கடத்தும் வில்லனிடம் அதர்வா எப்படி குழந்தைகளை காப்பாற்றுகிறார் என்பதை மாஸ் ஆக்ஷன் கலந்து த்ரில்லிங்காக சொல்வது போல் வெளியாகியுள்ளது இந்த டீசர். இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் யூ-ட்யூபில் வெளியான இந்த டீசர் தற்போது வரை 4 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)