Skip to main content

‘வணங்கான்’ படத்தில் சூர்யாவுக்கு பதில் யார்? - வெளியான புது தகவல்

Published on 07/12/2022 | Edited on 07/12/2022

 

atharvaa replaced suriya in vanangaan movie

 

பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வந்த படம் 'வணங்கான்'. இப்படத்தில் கதாநாயகியாக க்ரீத்தி ஷெட்டி நடிப்பதாகவும், ஜி.வி பிரகாஷ் இசையமைப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. மூன்றாவது முறையாக பாலா மற்றும் சூர்யா கூட்டணி உருவாவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி பகுதியில் நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. 

 

ad

 

இதனிடையே கடந்த 4 ஆம் தேதி 'வணங்கான்' படத்தில் இருந்து சூர்யா விலகுகிறார் என பாலா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். சூர்யா தரப்பும் இதனை உறுதிப்படுத்தும் விதமாக அறிவிப்பு வெளியிட்டது. 'வணங்கான்' படத்தில் சூர்யா விலகினாலும் படத்தின் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என பாலா தெரிவித்திருந்தார். 

 

இந்நிலையில், 'வணங்கான்' படத்தில் சூர்யாவுக்கு பதில் யார் நடிப்பார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது. இந்தச் சூழலில் சூர்யா நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் அதர்வா நடிக்க அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அதர்வாவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. அதர்வாவின் சினிமா கரியரில் பாலா இயக்கிய 'பரதேசி' படம் ஒரு திருப்புமுனையாக அமைந்து, அந்தப் படத்தில் அதர்வாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கோலிவுட்டில் மூன்றாவது படம் - சூர்யாவிற்கு ஜோடியான பூஜா ஹெக்டே

Published on 01/06/2024 | Edited on 01/06/2024
pooja hegde to pair with suriya in karthik subbaraj new movie

சூர்யா தற்போது தனது 42வது படமான ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  3டி முறையில் சரித்திரப் படமாக 38 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. சமீபத்தில் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் வருகிற ஏப்ரலில் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இப்படத்தைத் தொடர்ந்து தனது 43வது படத்திற்காக சுதா கொங்கராவுடன் கூட்டணி வைத்தார். இப்படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மா உள்ளிட்ட பிரபலங்களும் கமிட்டாகினர். கடந்த அக்டோபர் மாதம் வெளியான அறிவிப்பு வீடியோவில், படத்தின் தலைப்பு மறைக்கப்பட்டு 'புறநானூறு' என்ற டேக் லைன் மட்டும் இடம் பெற்றிருந்தது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ள நிலையில் அவருக்கு 100வது படமாக அமைந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் உள்ள கல்லூரியில் தொடங்கவுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் இப்படத்திற்கு நேரம் அதிகம் தேவைப்படுவதாகக் கூறி படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. 

இதற்கிடையில் திடிரென்று கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. மேலும் சூர்யாவின் 44ஆவது படமாக இப்படம் உருவாகும் என்றும் சூர்யாவின் 2டி நிறுவனமும் கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இப்படத்தில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் நடிக்கவுள்ளதாகவும் ஜூன் இடையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. 

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளதாக அவரது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு அறிவித்தது. பின்பு முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானி தொடங்குவதாகவும் ஆக்‌ஷன் காட்சிகள் எடுக்கப்படவுள்ளதாகவும் அறிவித்தது. அங்குப் பிரம்மாண்ட செட் போடப்பட்ட வீடியோவும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இப்படத்தில் ஹூரோயின் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி பூஜா ஹெக்டே இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். பூஜா ஹெக்டே கடைசியாக தமிழில் விஜய்யின் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இதுவரை முகமூடி, பீஸ்ட் என இரண்டு தமிழ்ப் படங்களிலே நடித்துள்ள இவர், தற்போது சூர்யா படத்தின் மூலம் மூன்றாவது தமிழ்ப் படத்தில் நடிக்கிறார். இதனிடையே இந்தி மற்றும் தெலுங்கில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

ரிலீஸுக்கு ரெடியான பாலாவின் வணங்கான்

Published on 01/06/2024 | Edited on 01/06/2024
vanangaan release update

பாலா தற்போது இயக்கி வரும் படம் 'வணங்கான்'. இதில் முன்பு சூர்யா கமிட்டாகி நடித்து வந்த நிலையில், சில காரணங்களால் விலகிவிட்டார். மேலும் கதாநாயகியாக க்ரித்தி ஷெட்டியும் ஒப்பந்தமாகியிருந்த நிலையில் அவரும் விலகிவிட்டார். இதையடுத்து சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய்யை வைத்து பாலா இயக்கி வந்தார். கன்னியாகுமரியில் படப்பிடிப்பு தொடங்கி, பல்வேறு கட்டங்களாக பல இடங்களில் நடந்து இறுதிக்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடந்தது.

இப்படத்தை சுரேஷ் காமாட்சி மற்றும் பாலா இணைந்து தயாரிக்க கதாநாயகியாக ரோஷிணி பிரகாஷ் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தில் அனைத்து பாடல்களுக்கும் வைரமுத்து வரிகள் எழுதியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் கடந்த டிசம்பர் மாதம் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டது. டீசர் பிப்ரவரியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இதனிடையே மலையாள நடிகை மமிதா பைஜு, இப்படத்தில் நடித்தபோது பாலா அடித்ததாகவும் அதன் காரணத்தால் படத்தை விட்டு வெளியேறியதாகவும் பகிர்ந்திருந்தார். அது கோலிவுட்டில் சற்று பரபரப்பை எற்படுத்த பின்பு “நான் மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ அல்லது வேறு எந்த விதமான துஷ்பிரயோகத்தையும் அந்த படத்தின் படப்பிடிப்பின் போது, அனுபவிக்கவில்லை. இதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். பிற தொழில் ரீதியான ஒப்பந்தங்கள் காரணமாகவே, அந்தப் படத்திலிருந்து விலகிவிட்டேன்” என விளக்கமளித்திருந்தார். 

இந்த நிலையில் இப்படம் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என முன்னர் அறிவிப்பு வெளியான நிலையில் சில காரணங்களால் வெளியாகவில்லை. இதையடுத்து தற்போது படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. ஜூலையில் படம் வெளியாகும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு பாலா, அருண் விஜய் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 12ல் ஷங்கர் - கமல் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படம் வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.