Skip to main content

முன்னணி ஹீரோ படத்தின் ரிலீஸ் அப்டேட்; போஸ்டருடன் வெளியிட்ட உதயநிதி

 

Atharvaa movie Trigger release update announced by udhayanidhi

 

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் அதர்வா. 'தள்ளி போகாதே' படத்தை தொடர்ந்து ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ள 'குருதி ஆட்டம்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனிடையே சாம் ஆண்டன் இயக்கத்தில் ‘ட்ரிக்கர்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் தன்யா ரவிசந்திரன் கதாநாயகியாக நடிக்க, அருண் பாண்டியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரதீக் சக்கரவர்த்தியுடன் இணைந்து ஸ்ருதி நல்லப்பா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் க்ளிம்பஸ் வீடியோ கடந்த ஆண்டு வெளியானது.

 

இந்நிலையில் ‘ட்ரிக்கர்’ படத்தின் ரிலீஸ் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தை 'ரோமியோ பிக்சர்ஸ்' நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகிறது. இதனை உதயநிதி தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து படத்தின் புதிய போஸ்டரையும் பகிர்ந்துள்ளார்.