/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/50_15.jpg)
கடந்த 2017ஆம் ஆண்டு நானி நடிப்பில் வெளியான 'நின்னு கோரி' என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக், 'தள்ளிப் போகாதே' என்ற பெயரில் உருவாகியுள்ளது. இப்படத்தை ஆர்.கண்ணன் இயக்க, அதர்வா நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பணிகள் கடந்த ஆண்டே நிறைவடைந்த நிலையில், கரோனா பரவல் காரணமாகப் படத்தின் ரிலீசில் சிக்கல் எழுந்தது. இந்த நிலையில், நீண்ட இழுபறிகளுக்குப் பிறகு படத்தின் புதிய ரிலீஸ் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ஆயுதபூஜை தினமான அக்டோபர் 14ஆம் தேதி தள்ளிப் போகாதே திரைப்படம் வெளியாகவுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)