/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/39_14.jpg)
சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான டெடி திரைப்படம் கடந்த மார்ச் மாதம் நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, சக்தி செளந்தர்ராஜன் - ஆர்யா கூட்டணி மீண்டும் ஒருமுறை இணைந்துள்ளது. ஆர்யா 33 எனத் தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஆர்யா மற்றும் திங்க் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இமான் இசையமைக்கிறார்.
இப்படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக ஜகமே தந்திரம் நாயகி ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். நடிகை சிம்ரன், தியாகராஜன், காவ்யா ஷெட்டி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. சென்னையில் நடைபெற்ற பூஜை நிகழ்வில் ஆர்யா, ஐஸ்வர்யா லட்சுமி, இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)