Published on 18/09/2021 | Edited on 18/09/2021
![Arvind Swamy](http://image.nakkheeran.in/cdn/farfuture/Ihduk_IDH-GuyavF99x1mbCLnWnMlvt0vlZ7kx76jd0/1631950773/sites/default/files/inline-images/31_39.jpg)
‘என்னமோ நடக்குது’, ‘அச்சமின்றி’ ஆகிய படங்களை இயக்கிய ராஜபாண்டி இயக்கத்தில், அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கள்ளபார்ட்’. இப்படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக ரெஜினா கெசண்ட்ரா நடித்துள்ளார். மூவிங் ஃபிரேம் நிறுவனம் சார்பில் எஸ். பார்த்தி மற்றும் எஸ்.எஸ். வாசன் இணைந்து தயாரித்துள்ளனர்.
இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து ரிலீசிற்குத் தயாராகிவரும் நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. கையில் பேண்ட், வாயில் சிகரெட் என மிரட்டலான தோற்றத்தில் அரவிந்த் சாமி காட்சியளிக்கும் இந்தப் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.