Skip to main content

அது நெகட்டிவ் ஆகிவிடக்கூடாது என்பதால் வெளியில் காட்டிக்கொள்வதில்லை - அருள்நிதி பேட்டி 

Published on 27/06/2022 | Edited on 27/06/2022

 

 Arulnithi

 

எருமசாணி யூ-ட்யூப் பிரபலம் விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டி-ப்ளாக்'. இப்படம் ஜூலை 1ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் நாயகன் அருள்நிதியை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

”எனக்கு வருகிற கதைகள் எல்லாமே திரில்லராகவே வருகிறது. இந்தப் படத்தின் இயக்குநர் விஜய்யின் யூடியூப் வீடியோஸ் பார்த்திருக்கிறேன். நல்லா கலகலப்பா ஜாலியாக இருக்கும். அவர் கதை சொல்ல வந்தபோது ஏதாவது ஜாலியான கதையைச் சொல்லுவார் என தான் எதிர்பார்த்தேன். ஆனால், அவரும் திரில்லர் கதையைத்தான் சொன்னார். அதேநேரம் கதை ரொம்பவும் பிடித்திருந்தது. அதனால் உடனே ஓகே சொன்னேன். 

 

படத்தில் கதைக்களம் கோயம்புத்தூர். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை இயக்குநர் விஜய் எடுத்திருக்கிறார். நான் இதுவரை பண்ண திரில்லர் படங்களில் இருந்து இந்தப் படம் வித்தியாசமாக இருக்கும். சினிமாவில் எனக்கு சில கஷ்டமான விஷயங்கள் உள்ளன. குறிப்பிட்ட வளர்ச்சியை எட்டுவதற்குள் அதை வெளியே காட்டி அதுவே எனக்கு நெகட்டிவ் ஆகிவிடக்கூடாது என்பதால் கொஞ்சம் பெயர் எடுத்தவுடன் கஷ்டமான விஷயங்களை உடைக்கும்படி மற்ற ஜானரிலும் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அடுத்து லைக்காவில் ஒரு படம் பண்ண இருக்கிறேன். அது ஜாலியான ஆக்‌ஷன் கலந்த எமோஷ்னல் படமாக இருக்கும். ராட்சசி பட இயக்குநர் கௌதமுடன் இணைந்து ஒரு படம் பண்ண இருக்கிறேன். இந்த மீசை அந்தப் படத்திற்காகத்தான் வைத்திருக்கிறேன். அது வில்லேஜ் ஆக்‌ஷன் படமாக இருக்கும். திரில்லர் படங்கள் என்னுடைய பலம் என்பதால் அந்த ஜானர் படங்களையும் என்னால் விட்டுவிட முடியாது.

 

அனைவருக்கும் பிடிக்கக்கூடிய வித்தியாசமான திரில்லர் படமாக  'டி-ப்ளாக்' இருக்கும் என்று நம்புகிறேன். நிச்சயம் திரையரங்கில் வந்து பாருங்கள்”. இவ்வாறு அருள்நிதி தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'டிமான்ட்டி காலனி 2' - இயக்குநரை மாற்றிய படக்குழு

Published on 30/11/2022 | Edited on 30/11/2022

 

Demonte Colony 2 crew changes the director

 

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள் நிதி நடிப்பில் 2015-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் 'டிமான்ட்டி காலனி'. இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பை வெளியிட்ட படக்குழு, அருள் நிதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிப்பார் எனத் தெரிவித்தது.

 

மேலும் அஜய் ஞானமுத்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரிக்க, வெங்கி வேணுகோபால் இயக்குவார் எனத் தெரிவித்திருந்தது. இந்நிலையில் 'டிமான்ட்டி காலனி 2' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக அறிவித்த படக்குழு இது தொடர்பான புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை பார்க்கையில், அஜய் ஞானமுத்து இயக்குவார் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

ஏற்கனவே வெங்கி வேணுகோபால் இயக்குவார் என அறிவிப்பு வெளியான நிலையில் அவரது பெயர் இப்போஸ்டரில் இடம் பெறவில்லை. இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். வெங்கி வேணுகோபால், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான 'கோப்ரா' படத்தில் இணை இயக்குநராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

எனவே 'டிமான்ட்டி காலனி 2' படத்தின் முதல் பாகத்தை இயக்கிய அஜய் ஞானமுத்துவே இயக்குவார் என்பது தெரிய வந்துள்ளது.  

 

 

Next Story

'அருள்நிதி 15' படத்தின் அனைத்து உரிமைகளையும் கைப்பற்றியது சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம்!

Published on 18/07/2021 | Edited on 18/07/2021

 

 

actor arul nidhi 15th film Sakthi Film Factory

 

பி.சக்திவேலனின் 'சக்தி ஃபிலிம் ஃபேக்டரி' நிறுவனம் (Sakthi Film Factory) தமிழ் திரைத்துறையில் ரிலீஸ் மற்றும் மார்க்கெட்டிங் மூலம் பல அற்புதமான வெற்றி திரைப்படங்களைத் தந்துள்ளது. அவர்களின் மிகச்சிறந்த மார்க்கெட்டிங் உத்திகள், ரிலீஸில் அவர்கள் கடைப்பிடிக்கும் புதுமையான நடைமுறைகள், பட்டி தொட்டி வரை, திரைப்படங்களை அவர்கள் கொண்டு சேர்க்கும் பாங்கு, தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் மத்தியில் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பெயரினை பெற்று தந்திருக்கிறது. திரைத்திறையில் புகழ்பெற்ற நிறுவனமாக மாறியுள்ள, 'சக்தி ஃபிலிம் ஃபேக்டரி' நிறுவனம் முதல் முறையாக ஒரு திரைப்படத்தின் முழு உரிமைகளையும் பெற்று அதனை வெளியிடும் பயணத்தில் இறங்கியுள்ளது. ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங்கின் எம்என்எம் ஃபிலிம்ஸ் நிறுவன தயாரிப்பில், யூ-டியூப்பில் எரும சாணி தொடர் மூலம் புகழ் பெற்ற விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கத்தில், தற்போதைக்கு 'அருள்நிதி 15' என தலைப்பிடப்பட்டிருக்கும், புதிய திரைப்படத்தின் அனைத்து உரிமைகளையும் பெற்றிருக்கிறது 'சக்தி ஃபிலிம் ஃபேக்டரி' நிறுவனம்.

 

'சக்தி ஃபிலிம் ஃபேக்டரி' நிறுவனம் சார்பில் பி.சக்திவேலன் இது குறித்து கூறியதாவது, "நடிகர் அருள்நிதி மிக வித்தியாசமான களங்களில், ரசிகர்கள் ரசிக்கும் படியான படங்களையும், குடும்பத்தினர் கொண்டாடும் படங்களையும், தொடர்ச்சியாக தந்து வருகிறார். அவரது சமீபத்திய படமான 'களத்தில் சந்திப்போம்' திரைப்படத்தின் வெற்றி திரைத்துறையில் அவரது மதிப்பை உயர்த்தியிருக்கிறது. ஒரு நண்பரின் மூலமாக அவரது இந்த திரைப்படத்தின் இறுதி பதிப்பைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படம் முடியும் வரையிலும் படம் எவ்வாறு செல்லும் என்பதை கணிக்க முடியாதபடி, பல ஆச்சர்யஙகளைத் தந்தது. இந்த திரைப்படம். அனைத்து வகையான ரசிகர்களும் கொண்டாடும் அம்சங்கள் படத்தில் நிரம்பியிருந்தது. 

 

படம் முடிந்த கணத்திலேயே படத்தின் அனைத்து உரிமைகளையும் பெற்று விட வேண்டும் என்கிற வேட்கை என்னுள் உண்டானது. படத்தின் கதையில் அருள்நிதியின் நடிப்பு மிக அபாரமானதாக இருந்தது. இப்படத்தின் வெளியீட்டுக்கு பிறகு அவர் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக உயர்வார். பல படங்களில் பெருமையுடன் வழங்குகிறோம் என்பதை வாய்வார்த்தையாக உபயோகிப்பார்கள். ஆனால் இத்திரைப்படம் 'சக்தி ஃபிலிம் ஃபேக்டரி' நிறுவனத்திற்கு மிக உணர்ச்சிகரமான தருணம் ஆகும். உண்மையிலேயே இப்படத்தை மிக பெருமையுடன் வழங்கவுள்ளோம். இப்படத்தைக் கண்டிப்பாக தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் 2021 ஜூலை 21 அன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பெருமையுடன் வெளியிடவுள்ளோம்" என்றார்.  

 

எம்என்எம் நிறுவனம் (MNM Films) சார்பில் அரவிந்த் சிங் கூறியதாவது, "தமிழ் திரையுலகில் மிகப்பெரும் பெயரைப் பெற்றிருக்கும் 'சக்தி ஃபிலிம் ஃபேக்டரி' நிறுவனம், எனது முதல் தயாரிப்பாக உருவாகியுள்ள படத்தின் அனைத்து உரிமைகளையும் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. தரமான கதைகளைக் கொண்டு உருவாகும் படைப்புகள், சரியான குழுவினரைச் சென்றடைந்தால் மிகப்பெரிய அளவிலான வெற்றியை அடையும், எனும் மிகப்பெரும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இத்திரைப்படம் குழுவினர் அனைவரின் கனவின் படி உருப்பெற்றதற்கு, மிக முக்கிய காரணமாய் விளங்கிய நடிகர் அருள்நிதிக்கு இந்நேரத்தில் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். தரமான ஒரு படைப்பினை உருவாக்கி, அந்த படைப்பு 'சக்தி ஃபிலிம் ஃபேக்டரி' நிறுவனம் போன்ற மிகச்சிறந்த நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படுவது, மிகப்பெரும் ஊக்கத்தையும், மகிழ்ச்சியையும் அளித்துள்ளது" என்றார்.  

 

இயக்குநர் விஜய்குமார் ராஜேந்திரன் பகிர்ந்துகொண்டதாவது, "எனது முதல் திரைப்படத்தை இயக்கும், இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்த போது, எனது முழுத்திறமையை மட்டும் நிரூபித்தால் போதாது. சினிமா இயக்கும் கனவுகளோடு இருக்கும், மற்ற யூ-டியூபர்களுக்கு முன்னுதாரணமாகவும் நான் இருக்க வேண்டும் எனபதில் உறுதியாக இருந்தேன். தற்போது எனது படைப்பு, சக்தி ஃபிலிம் ஃபேக்டர' நிறுவனம் போன்ற மிகப்பெரும் நிறுவனத்தால் அங்கீகரிகப்பட்டு, அவர்கள் மிகப்பெரும் வெளியீடாக, இப்படத்தை வெளியிட இருப்பது, மிகப்பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இப்படம் அனைத்து தரப்பினரும் கொண்டாடும் படமாக இருக்கும். அதிலும் கல்லூரி பின்னணியில் கதை நடப்பதால், இளைஞர்களைக் கண்டிப்பாக ஈர்க்கும். மிகப்பெரிய அளவில் படத்தினை விளம்பரப்படுத்தி, அனைத்து ரசிகர்களிடமும் இப்படத்தினைக் கொண்டு செல்லும் முனைப்பில் இருக்கிறோம். விரைவில் அதற்கான பணிகள் துவங்கும்" என்றார்.