
நயன்தாரா நடிப்பில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான 'அறம்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கோபி நயினார். இப்போது ஆண்ட்ரியாவை வைத்து 'மனுசி' என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை வெற்றிமாறன் தயாரிக்கிறார்.
இந்நிலையில் கோபி நயினார் மீது இலங்கையை சேர்ந்த சியாமளா என்ற பெண் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோபி நயினார் 2018ஆம் ஆண்டு 'கருப்பர் கூட்டம்' என்ற தலைப்பில் திரைப்படம் எடுப்பதாகக் கூறி ரூ.30 லட்சம் ஏமாற்றிவிட்டதாக அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தயாரிப்பாளர் விஜய் அமிர்தராஜ் மீதும் குற்றம் சாட்டியுள்ளார்.
இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்துள்ளார். இது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.