ar rahman honorary as president of trinity laban

இந்திய சினிமாவை தாண்டி உலக அளவில் கவனிக்கப்படும் இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர் ரஹ்மான் தற்போது பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தமிழில் கமல் - மணிரத்னத்தின் தக் லைஃப், ஜெயம் ரவி - கிருத்திகா உதயநிதியின் காதலிக்க நேரமில்லை, ஜெயம் ரவி - அறிமுக இயக்குநர் அர்ஜுனனின் ‘ஜீனி’ உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில் லண்டனில் இசை நாடகம் மற்றும் சமகால நடனத்திற்கான கன்சர்வேட்டரியான டிரினிட்டி லாபான் இசைப்பள்ளியின் கௌரவத் தலைவராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவியில் அவர் ஐந்து ஆண்டு காலத்திற்கு பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இது குறித்து டிரினிட்டி லாபன் அவர்களது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, “ஏ.ஆர். ரஹ்மானுடனான எங்கள் ஒத்துழைப்பு, 2008 ஆம் ஆண்டு அவர் கே.எம். மியூசிக் கன்சர்வேட்டரியை நிறுவியபோதில் இருந்து தொடர்கிறது. இந்த ஆண்டு, டிரினிட்டி லாபன் முறைப்படி கூட்டு சேர்ந்துள்ளது. கேஎம்எம்சி, மாணவர்கள் தங்கள் படிப்பை சென்னைக்கும் லண்டனுக்கும் இடையில் இணைக்கும் வாய்ப்பை வழங்குகிறது. எல்லைகளைத் தாண்டி கருத்துக்கள் மற்றும் மரபுகளின் பரிமாற்றத்தை வளர்க்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.